தித்திக்கும் தேங்காய் வேர்க்கடலை சட்னி இருந்தா போதும்! இட்லி தோசை மட்டுமல்ல சாதத்திற்கும் பெஸ்ட் காமினேஷன்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தித்திக்கும் தேங்காய் வேர்க்கடலை சட்னி இருந்தா போதும்! இட்லி தோசை மட்டுமல்ல சாதத்திற்கும் பெஸ்ட் காமினேஷன்!

தித்திக்கும் தேங்காய் வேர்க்கடலை சட்னி இருந்தா போதும்! இட்லி தோசை மட்டுமல்ல சாதத்திற்கும் பெஸ்ட் காமினேஷன்!

Suguna Devi P HT Tamil
Published Jun 02, 2025 03:20 PM IST

வீட்டில் சட்னி செய்வது என்பது மிகவும் எளிதான காரியம் ஆகும். ஆனால் சிலருக்கு வழக்கமான சட்னி போர் அடித்து போக வாய்ப்புள்ளது. இன்று இட்லி, தோசை மட்டுமில்லாமல் சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏதுவாக தேங்காய் வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி என இங்கு பார்ப்போம்.

தித்திக்கும் தேங்காய் வேர்க்கடலை சட்னி இருந்தா போதும்! இட்லி தோசை மட்டுமல்ல சாதத்திற்கும் பெஸ்ட் காமினேஷன்!
தித்திக்கும் தேங்காய் வேர்க்கடலை சட்னி இருந்தா போதும்! இட்லி தோசை மட்டுமல்ல சாதத்திற்கும் பெஸ்ட் காமினேஷன்!

தேவையான பொருட்கள்

எண்ணெய் - 5 தேக்கரண்டி

வேர்க்கடலை - 1 கப்

பச்சை மிளகாய் - 10

பூண்டு பற்கள் - 4

புளி

தண்ணீர்

பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி

துருவிய தேங்காய் - 1 கப்

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

சிவப்பு மிளகாய் - 1

பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வேர்க்கடலை சேர்த்து வறுக்கவும். வேர்க்கடலை வறுபட்டதும், பச்சை மிளகாய் சேர்த்து வறுக்கவும். பூண்டு சேர்க்கவும். நான்கு துண்டு புளி சேர்க்கவும்.

வறுத்த பொருட்களை ஆற விடவும். ஒரு மிக்ஸ்ர் ஜார்க்கு மாற்றி, பொட்டுக்கடலை, துருவிய தேங்காய், கல்லு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும். பாதி அரைபட்டதும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும். ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய், பெருங்காய தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும். சுவையான வேர்க்கடலை சட்னி சூடான இட்லி அல்லது தோசை உடன் பரிமாற தயாராக உள்ளது.