கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக் செய்ய ரெடியா! இதோ ரோஸ்மில்க் கேக் செய்யும் எளிமையான முறை!
கிறிஸ்துமஸ் என்றாலே உலகம் முழுவதும் கொண்டாடும் ஒரு சிறப்பான பாண்டிகையாகும். கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களில் தவறாமல் இடம் பிடிப்பது கேக், இந்த கேக் இல்லாமல் கொண்டாட்டம் நிறைவு பெறாது.
![கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக் செய்ய ரெடியா! இதோ ரோஸ்மில்க் கேக் செய்யும் எளிமையான முறை! கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக் செய்ய ரெடியா! இதோ ரோஸ்மில்க் கேக் செய்யும் எளிமையான முறை!](https://images.hindustantimes.com/tamil/img/2024/12/18/550x309/rosemilk_cake_1734500412465_1734500416633.png)
கிறிஸ்துமஸ் என்றாலே உலகம் முழுவதும் கொண்டாடும் ஒரு சிறப்பான பாண்டிகையாகும். கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களில் தவறாமல் இடம் பிடிப்பது கேக், இந்த கேக் இல்லாமல் கொண்டாட்டம் நிறைவு பெறாது. கிறிஸ்துமஸ் ஈவினிங்கில் அனைவரும் கேக் செய்து ஆண்டவரை வழிபட்டு மகிழ்ச்சியுடன் இந்த கேக்குகளை சாப்பிடுவார்கள். இந்த வருடம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக் ஒன்று பிரபலமடைய தொடங்கியுள்ளது. அது தான் ரோஸ்மில்க் கேக். இது பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சி காரமான நிறத்தில் இருக்கும். குழந்தைகளும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ரோஸ்மில்க் கேக்கை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். இதனை செய்யும் எளிய முறையை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
2 கப் மைதா
முக்கால் லிட்டர் பால்
500 கிராம் சர்க்கரை
அரை கப் விப்டு க்ரீம்
1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா
கால் கப் தயிர்
அரை கப் சமையல் எண்ணெய்
5 டேபிள் ஸ்பூன் ரோஸ் சிரப்
ரோஸ் கலரிங் ஜெல்
3 டேபிள் ஸ்பூன் கன்டென்ஸ்டு மில்க்
அரை கப் சிங் சுகர்
கால் கப் பிஸ்தா
செய்முறை
முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் காய்ச்ச வேண்டும். நன்கு காய்ந்த பின்னர் பாலை ஆற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு அகன்ற பாத்திரத்தில் காய்ச்சி ஆறவைத்த பால், சர்க்கரை, தயிர், எண்ணெய், ரோஸ் சிரப், ரோஸ் கலரிங் ஜெல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். பின்னர் மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ளவும். பிறகு இந்த மைதா மாவு கலவையை சிறிது சிறிதாக பால் கலவையுடன் சேர்த்து கட்டியின்றி கலக்கி விட வேண்டும்.
பின்னர் ஒரு கேக் ட்ரேயை எடுத்து அதில் வெண்ணெய் தடவி, பட்டர் பேப்பர் வைக்க வேண்டும். பின்னர் இந்த கேக் டிரேயில் கேக் கலவையை மெதுவாக ஊற்ற வேண்டும். இதற்கு முன்னதாக ஓவனை 180 டிக்ரீயில் 15 நிமிடம் சூடு செய்துக் கொள்ளவும். பின்னர் கேக் ட்ரேயை வைத்து 180 டிக்ரீயில் 30 நிமிடம் பேக் செய்ய வேண்டும். கெட்டியான ரோஸ் மில்க் செய்ய ஒரு பாத்திரத்தில் பால், கன்டென்ஸ்டு மில்க், ரோஸ் சிரப் சேர்த்து நன்கு கலந்து விடவும். கேக்கை நன்கு ஆறவிடவும். ஆறிய பிறகு பட்டர் பேப்பரை எடுத்து விட்டு கேக்கின் மேல் பகுதியை சமமாக வெட்டவும். கேக்கை மீண்டும் டின்னில் வைத்து தயார் செய்த ரோஸ் மில்கை ஊற்றி 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும். கேக்கிற்கு கிரீம் செய்ய ஒரு பாத்திரத்தில் விப்டு கிரீம், ஐசிங் சுகர் சேர்த்து 15 நிமிடம் பீட் செய்யவும். அடுத்து கேக்கின் மீது செய்த கிரீமை சமமாக பரப்பி அதன் மேல் நறுக்கிய பிஸ்தா, ரோஸ் பெட்டல்ஸ் தூவி அலங்கரிக்கவும். அருமையான ரோஸ் மில்க் கேக் தயார். நீங்களும் உங்களது வீடுகளில் செய்து பார்த்து அசத்துங்கள்.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்