Chicken Egg Soup: கார சாரமான முட்டை சிக்கன் சூப் செய்வது எப்படி? இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க! இதோ ஈசியான ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Chicken Egg Soup: கார சாரமான முட்டை சிக்கன் சூப் செய்வது எப்படி? இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க! இதோ ஈசியான ரெசிபி!

Chicken Egg Soup: கார சாரமான முட்டை சிக்கன் சூப் செய்வது எப்படி? இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க! இதோ ஈசியான ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Jan 10, 2025 09:24 PM IST

Chicken Egg Soup: பெரிய ஹோட்டல்களுக்கு சென்றால் சாப்பிடுவதற்கு முன் சூப் தருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த சூப் குடித்தால் அதிகம் பசி எடுக்கும் எனக் கூறப்படுகிறது. சில ஹோட்டல்களில் இலவசமாகவும், சில இடங்களில் விலைக்கும் என இந்த சூப்கள் விற்கப்படுகின்றன.

Chicken Egg Soup: கார சாரமான முட்டை சிக்கன் சூப் செய்வது எப்படி? இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க! இதோ ஈசியான ரெசிபி!
Chicken Egg Soup: கார சாரமான முட்டை சிக்கன் சூப் செய்வது எப்படி? இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க! இதோ ஈசியான ரெசிபி! (Pixabay)

தேவையான பொருட்கள்

சிக்கன் சாறு தயாரிக்க

கால் கிலோ சிக்கன் 

4 பல் பூண்டு 

ஒரு பெரிய வெங்காயம் 

2 கேரட்

2 செலரி

1 பிரியாணி இலை 

ஒரு டீஸ்பூன் மிளகு 

தேவையான அளவு உப்பு 

தேவையான அளவு தண்ணீர் 

ஒரு பெரிய அளவு துண்டு இஞ்சி 

2 டீஸ்பூன் சோயா சாஸ் 

4 முட்டை 

3 டீஸ்பூன் வெங்காயத்தாள் 

2 டீஸ்பூன் மிளகு தூள் 

செய்முறை

முதலில் சிக்கன் ஸ்டாக் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். சிக்கன் ஸ்டாக் செய்வதற்கு முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நறுக்கிய சிக்கன் துண்டுகள், பூண்டு பற்கள், கேரட், பெரிய வெங்காயம், செலரி, பிரியாணி இலை, உப்பு, முழு மிளகு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்கு வதங்கிய பின்னர் அதில் 4 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றிகொதிக்க விட வேண்டும். இவை நன்றாக கொதித்தவுடன் பாத்திரத்தை மூடி ஒரு மணி நேரத்திற்கு மிதமான சூட்டில் கொதிக்க விட வேண்டும். அப்போது தான் சிக்கன் நன்றாக வெந்து வரும்.  ஒரு மணி நேரத்திற்கு பின்னர் பாத்திரத்திலுள்ள வெந்த சிக்கன் மற்றும் காய்கறிகளை வெளியே எடுத்து அதிலுள்ள தண்ணீரை வடிகட்டி வேறு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 பின்னர் சிக்கன் ஸ்டாக்கை வேகவைத்த பாத்திரத்திற்கு மாற்றி அதில் இஞ்சி, வெங்காயத்தாள், நறுக்கிய வெங்காயம் மற்றும் சோயா சாஸ் ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும். அடுத்து ஒரு அகன்ற கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடித்த முட்டையை கொதிக்கும் சிக்கன் ஸ்டாக்கில் மிக மெதுவாக ஊற்ற வேண்டும். முட்டையை ஊற்றும் பொழுது ஒரு கரண்டியால் கிளறிக்கொண்டே ஊற்றினால் முட்டை நூல் போல் இருக்கும்.  அடுத்து இதில் வெங்காயத்தாள் பச்சை, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கலக்கவும். வித்யாசமான முட்டை சூப் தயார். இதனை வீட்டில் அசைவ உணவுகள் செய்யும் போது செய்து சாப்பிடலாம். குடிப்பதற்கு ரெஸ்டாரண்ட் சுவையில் இருக்கும். சளி, இருமல் உள்ளவர்களும் சற்று கூடுதலாக மிளகுத்தூள் சேர்த்து குடித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும். வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடித்து பாருங்கள்.  

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.