சமையலே தெரியலனாலும் இந்த சிக்கன் ரெசிபிய செய்யலாம்! ஈசியான சிக்கன் சுக்கா செய்வது எப்படி?
சமையலே தெரியாதவர்கள் கூட எளிமையாக செய்யும் சமையல் ரெசிபி ஒன்று உள்ளது. அது தான் சிக்கன் சுக்கா. இது செய்வதற்கு மிகவும் எளிமையான முறைகள் உள்ளன. இதனை எப்படி செய்வது என்பதை இங்கு தெரிந்துக் கொள்ளுங்கள்.
அசைவ உணவுகள் என்றால் எல்லாருக்கும் மிகவும் பிடித்தமான உணவாக இருந்து வருகிறது. ஆனால் இந்த அசைவ உணவை செய்வதும் சற்று சிக்கலான காரியமாகும். ஏனெனில் அதில் சேர்க்க வேண்டிய மசலாவை சரியான விதத்தில் போட வில்லையென்றால் அதன் சுவை முற்றிலும் மாறிவிடும். இதில் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் சமையலே தெரியாதவர்கள் கூட எளிமையாக செய்யும் சமையல் ரெசிபி ஒன்று உள்ளது. அது தான் சிக்கன் சுக்கா. இது செய்வதற்கு மிகவும் எளிமையான முறைகள் உள்ளன. இதனை எப்படி செய்வது என்பதை இங்கு தெரிந்துக் கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
அரை கிலோ சிக்கன்
அரை கப் தயிர்
4 பெரிய வெங்காயம்
4 பல் பூண்டு
சிறிய துண்டு இஞ்சி
எலுமிச்சை சாறு
1 டீஸ்பூன் மிளகாய் தூள்
1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
1 டீஸ்பூன் மல்லித் தூள்
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
1 டீஸ்பூன் மிளகு தூள்
அரை டீஸ்பூன் சீரகத்தூள்
250 மி. லி எண்ணெய்
சிறிதளவு கொத்தமல்லி தழை
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு நெய்
செய்முறை
முதலில் சிக்கனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். சிக்கனை கழுவும் போது கல் உப்பு உபயோகிப்பது மிகவும் சிறந்த முறையாகும். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் இதில் நீளமாக நறுக்கிய வெங்காயம் போட்டு நன்றாக பொன்னிறம் வரும் வரை வதக்க வேண்டும். பொன்னிறமாக மாறியதும் இதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு அகன்ற பாத்திரத்தில் கழுவிய சிக்கனை போட வேண்டும். பின்னர் அதில் அரை கப் தயிரை போட வேண்டும். பின்னர் இஞ்சி மற்றும் பூண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இதில் நாம் வதக்கி வைத்திருந்த வெங்காயத்தை போட வேண்டும். இந்த இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சிக்கனில் போட்டு கிளறி விட வேண்டும்.
இதனையடுத்து பின்னர் இதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள் மற்றும் கரம் மசாலா தூள் ஆகியவற்றை போட்டு கிளற வேண்டும். மேலும் இதில் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். பின்னர் இதனை நன்றாக கலக்கி விட்டு அப்படியே ஒரு சில நிமிடங்கள் மூடி வைத்து ஊற விட வேண்டும். பின்னர் அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்திருந்த சிக்கன் கலவையை அதில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் வேக விட வேண்டும். பின்னர் இறுதியாக கொத்தமல்லி தழையை நறுக்கி தூவி இறக்க வேண்டும். சூடான சுவையான சிக்கன் சுக்கா தயார்.
டாபிக்ஸ்