செட்டிநாடு இறால் குழம்பு வச்சா போதும்! பக்கத்து வீட்டு வரை மணக்கும்! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  செட்டிநாடு இறால் குழம்பு வச்சா போதும்! பக்கத்து வீட்டு வரை மணக்கும்! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!

செட்டிநாடு இறால் குழம்பு வச்சா போதும்! பக்கத்து வீட்டு வரை மணக்கும்! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!

Suguna Devi P HT Tamil
Published Jun 06, 2025 10:08 AM IST

செட்டிநாடு பாணியில் செய்யப்படும் ஒரு அசைவ குழம்பு ஆகும். இது மட்டன், சிக்கன், மீன் மாறும் இறால் என ஏதாவது ஒரு கறியுடன் தனித்துவமான மசாலா போன்ற மூலப்பொருட்களைக் கொண்டு செய்யப்படுகிறது. இது ஒரு காரமான, சுவையான குழம்பு ஆகும். இன்று செட்டிநாடு ஸ்டைலில் இறால் குழம்பு செய்வது எப்படி என பாரக்கப்போகிறோம்.

செட்டிநாடு இறால் குழம்பு வச்சா போதும்! பக்கத்து வீட்டு வரை மணக்கும்! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!
செட்டிநாடு இறால் குழம்பு வச்சா போதும்! பக்கத்து வீட்டு வரை மணக்கும்! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!

தேவையான பொருள்கள்

அரை கிலோ இறால்

1 டீஸ்பூன் மிளகு

1 டீஸ்பூன் சீரகம்

1 டீஸ்பூன் வெந்தயம்

1 டீஸ்பூன் கடுகு

1 டீஸ்பூன் கசகசா

1 பெரிய வெங்காயம்

1 பெரிய தக்காளி

5 பல் பூண்டு

5 பச்சை மிளகாய்

1 டீஸ்பூன் மஞ்சள் தூள்

அரை கப் துருவிய தேங்காய்

தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

முதலில் இறாலை நன்கு கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பை சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதில் உள்ள நீரை வடிகட்டி விடவும். பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் மற்றும் கசகசா சேர்த்து, 2-3 நிமிடம் வறுக்கவும். பிறகு சூடு ஆறியதும், அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைக்கவும். பின்னர் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தேங்காயை போட்டு 2-3 நிமிடம் வறுக்கவும்.

பின் அதனை எடுத்து ஆறியதும், மிக்ஸியில் வறுத்த தேங்காய், பச்சை மிளகாய் போட்டு, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். தேங்காயை வறுத்த அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும், பின் அதில் தக்காளி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும், அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு, 3-4 நிமிடம் வேக வைக்கவும். பின் அதில் தேங்காய் பேஸ்ட் சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள இறாலைப் போட்டு, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். இப்போது சுவையான செட்டிநாடு இறால் குழம்பு ரெடி. இதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.