Chettinadu Prawn Biryani: செட்டிநாடு ஸ்டைலில் கமகமக்கும் இறால் பிரியாணி! ஈசியான ரெசிபி இதோ!
Chettinadu Prawn Biryani:செட்டிநாடு சமையல் முறையில் அசைவ உணவுகளை செய்து சாப்பிட்டால் தனிப்பட்ட சுவையாக இருக்கும். வழக்கமாக நாம் வீடுகளில் செய்யும் உணவை விட இந்த வகை உணவு கூடுதல் சுவவையுடன் இருக்கும். இத்தகைய செட்டிநாடு சமையல் முறையில் இறால் பிரியாணி செய்வது எப்படி என இங்கு காண்போம்.

செட்டிநாடு சமையல் உணவு என்பது கடல் தாண்டியும் சென்றுள்ளது எனக் கூறலாம். செட்டிநாடு சமையல் வகைகளுக்கு என்றென்றும் தனி ரசிகர்கள் உள்ளனர். இந்த செட்டிநாடு சமையல் முறையில் அசைவ உணவுகளை செய்து சாப்பிட்டால் தனிப்பட்ட சுவையாக இருக்கும். வழக்கமாக நாம் வீடுகளில் செய்யும் உணவை விட இந்த வகை உணவு கூடுதல் சுவவையுடன் இருக்கும். இத்தகைய செட்டிநாடு சமையல் முறையில் இறால் பிரியாணி செய்வது எப்படி என இங்கு காண்போம்.
தேவையான பொருள்கள்
அரை கிலோ இறால்
2 கப் பாசுமதி அரிசி
2 பெரிய வெங்காயம்
2 தக்காளி
3 பச்சை மிளகாய்
2 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
ஒரு டேபிள்ஸ்பூன் தயிர்
அரை டீஸ்பூன் மிளகாய் தூள்
அரை டீஸ்பூன் கறி தூள்
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
அரை டீஸ்பூன் பிரியாணி மசாலா
ஒரு கைப்பிடி அளவு மல்லித் தழை
ஒரு கைப்பிடி அளவு புதினா
தேவையான அளவு உப்பு
ஒரு டீஸ்பூன் சோம்பு தூள்
சிறு துண்டு பட்டை
3 லவங்கம்
3 ஏலக்காய்
ஒரு பிரியாணி இலை
ஒரு அன்னாச்சிப்பூ
ஒரு மராத்தி மொக்கு
3 டீஸ்பூன் எண்ணெய்
செய்முறை
முதலில் இறாலை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு அகன்ற பாத்திரத்தில் சுத்தம் செய்த இறால், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் சோம்பு தூள் ஆகியவற்றை சேர்த்து ஊற வைக்க வேண்டும். இதனை குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வேண்டும். பின்னர் பாசுமதி அரிசியை கழுவி சுத்தம் செய்து 20 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாச்சி பூ ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். இவை அனைத்தும் வறுபட்ட பின்னர் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்
இவை அனைத்தும் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். பின் ஊறவைத்த இறாலைச் சேர்த்து ஒரு முறை பிரட்டி விடவும் அதிகம் வதக்கக் கூடாது தயிர், கறி மசாலா தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சோம்பு தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி விடவும். பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் நன்றாக கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும். பின் மிதமான தீயில் வேக வைக்கவும். பாதி வெந்ததும் தம் போடவும். சுவையான செட்டிநாடு இறால் பிரியாணி தயார். இதனை உங்களது வீடுகளில் செய்து பார்த்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். இது போன்ற அசைவ உணவுகளுக்கு செட்டிநாடு ஸ்டைல் மசாலா சேர்க்கும் போது அதன் சுவை அதிகரிக்கும்.

டாபிக்ஸ்