பிரேக்ஃபாஸ்ட்டிற்கு இது தான் பெஸ்ட் சாய்ஸ்! செட்டிநாடு குழி பணியாரம்! அசத்தாலான ரெசிபி இதோ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பிரேக்ஃபாஸ்ட்டிற்கு இது தான் பெஸ்ட் சாய்ஸ்! செட்டிநாடு குழி பணியாரம்! அசத்தாலான ரெசிபி இதோ!

பிரேக்ஃபாஸ்ட்டிற்கு இது தான் பெஸ்ட் சாய்ஸ்! செட்டிநாடு குழி பணியாரம்! அசத்தாலான ரெசிபி இதோ!

Suguna Devi P HT Tamil
Dec 26, 2024 10:54 AM IST

தமிழ்நாட்டின் உணவு வகைகளுக்கு உலகம் முழுவதும் பிரபலமானது ஆகும். அதிலும் தமிழ்நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு என தனி உணவு வகைகளும் உண்டு. அதிலும் செட்டிநாடு உணவுகள் என்றால் ஒரு தனி இடம் உண்டு. செட்டிநாடு ரெசிபிகள் ஒரு தனிப்பட்ட சுவையுடன் இருக்கும்.

பிரேக்ஃபாஸ்ட்டிற்கு இது தான் பெஸ்ட் சாய்ஸ்! செட்டிநாடு குழி பணியாரம்! அசத்தாலான ரெசிபி இதோ!
பிரேக்ஃபாஸ்ட்டிற்கு இது தான் பெஸ்ட் சாய்ஸ்! செட்டிநாடு குழி பணியாரம்! அசத்தாலான ரெசிபி இதோ!

தேவையான பொருட்கள் 

1 கப் பச்சரிசி 

கால் கப் உளுத்தம் பருப்பு 

அரை டீஸ்பூன் வெந்தயம் 

தேவையான அளவு தண்ணீர்

தேவையான அளவு உப்பு

தாளிக்கத் தேவையான பொருட்கள் 

2 டீஸ்பூன் எண்ணெய்

1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு

2 டீஸ்பூன் கடலை பருப்பு 

1 டீஸ்பூன் கடுகு 

1 டீஸ்பூன் சீரகம்

அரை டீஸ்பூன் பெருங்காய தூள்

சிறிய அளவிலா

2  பச்சை மிளகாய்

1 பெரிய வெங்காயம் 

ஒரு கைப்பிடி அளவு கொத்து கறிவேப்பிலை 

அரை முடி தேங்காய் 

ஒரு கைப்பிடி அளவு கொத்து கொத்தமல்லி 

தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

முதலிள் அரிசியை 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மேலும் உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தை தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். சரியாக 3 மணி நேரத்திற்கு பின்னர் அதிகப்படியான தண்ணீரை வடிகட்டி, ஊறவைத்த அரிசி மற்றும் பருப்பை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையான மாவாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த மாவை ஒரு அகன்ற பாத்திரத்திற்கு மாற்றி, சிறிது தண்ணீர் சேர்க்க வேண்டும். பின்னர் இந்த மாவினை குறைந்தது 8 மணி நேரம் புளிக்க விட வேண்டும். மாவு நன்கு புளித்த பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் அதில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு மற்றும் சீரகம் சேர்க்கவும்.

கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன், பெருங்காய தூள், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். அடுத்து கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கலக்கவும். கடைசியாக தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி இலை சேர்க்கவும். நன்றாக கலக்கவும். இந்த கலவையை புளித்த மாவில் போட வேண்டும்.  மாவு மிகவும் கெட்டியாக இருந்தால் நன்றாக கலந்து தண்ணீர் சேர்க்கவும். மசாலாவை சரிபார்த்து, மாவை ஒதுக்கி வைக்கவும். பணியார சட்டியை சூடாக்கி, அச்சுகளில் எண்ணெய் தடவவும். சூடானதும் அதில் பணியாரம் மாவை மெதுவாக அச்சுகளில் ஊற்றி, அனைத்து பணியாரங்களுக்கும் கீழ் பக்கம் முழுவதுமாக பொன்னிறமாக மாறும் வரை சமைக்கவும். மறுபுறம் திருப்பி, அவையும் பொன்னிறமாக மாறும் வரை சமைக்கவும். பணியாரம் இருபுறமும் நன்றாக வெந்ததும், வாணலியில் இருந்து இறக்கி ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். சுவையான செட்டிநாடு குழி பணியாரம் உங்களுக்கு விருப்பமான சட்னி அல்லது சாம்பாருடன் சூடாக பரிமாற தயாராக உள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.