Chettinadu Recipe: செட்டிநாடு ஸ்டைலில் கொத்துக்கறி பிரியாணி செய்வது எப்படி? இப்பவே தெரிஞ்சுக்கோங்க!
Chettinadu Recipe: செட்டிநாடு ரெசிபி மிகவும் ஈஸியான ரெசிபி ஆகும். ஒரு சில மசாலாக்கள் மட்டும் கூடுதலாக சேரக்கபட்டு செய்யப்படுகின்றனர். அதுவே அதன் சுவையை அதிகரிக்கிறது. இன்று செட்டிநாடு ஸ்டைலில் கொத்துக்கறி பிரியாணி செய்வது எப்படி என்பதை இங்கு காணலாம்.

தமிழ்நாட்டில் உணவுகள் என்றாலே பல பிரபலமான உணவு வகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வித சமையல் முறை பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. மதுரை திருநெல்வேலி என்றால் தென்னாட்டு சமையல் முறை, திண்டுக்கல்லிலும் திண்டுக்கல் பிரியாணி என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அது போலவே உலக அளவில் பிரபலமான ஒரு சமையல் முறை என்றால் செட்டிநாடு சமையல் முறை. காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த செட்டிநாடு சமையல் வகைகள் செய்யப்படுகிறது. செட்டிநாடு சமையல் வகைகளில் மிகவும் எளிமையான முறையில் சமைக்கப்படும் உணவுகள் உள்ளன. சமையல் என்றால் பலருக்கும் மிகவும் அலாதி பிரியம். ஆனால் செட்டிநாடு சமையல் செய்வது அனைவருக்கும் தெரியாத ஒரு முறையாகும். செட்டிநாடு ரெசிபி மிகவும் ஈஸியான ரெசிபி ஆகும். ஒரு சில மசாலாக்கள் மட்டும் கூடுதலாக சேரக்கபட்டு செய்யப்படுகின்றனர். அதுவே அதன் சுவையை அதிகரிக்கிறது. இன்று செட்டிநாடு ஸ்டைலில் கொத்துக்கறி பிரியாணி செய்வது எப்படி என்பதை இங்கு காணலாம்.
தேவையான பொருள்கள்
ஒரு கிலோ மட்டன் கொத்துக்கறி
ஒரு கப் பாசுமதி அரிசி
2 பெரிய வெங்காயம்
2 தக்காளி
2 டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது
கால் கப் புதினா
கால் கப் கொத்தமல்லித் தழை
அரை கப் தயிர்
1 பட்டை
இலவங்கம்
பிரிஞ்சி இலை
4 பச்சை மிளகாய்
அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள்
அரை டீஸ்பூன் மல்லித் தூள்
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு உப்பு
செய்முறை
கொத்துக்கறி பிரியாணி செய்ய முதலில் கடையில் சென்று மட்டனை வாங்கும் போதே நன்றாகக் கொத்துக் கறியாக வாங்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அரிசியை கழுவி சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு சாதத்தை முக்கால் பாகம் மட்டும் வேகும் வரை வேக வைத்து வடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் பட்டை, இலவங்கம் ஆகியவற்றை போட்டு வயதாக வேண்டும். பின்னர அதில் சிறிதளவு புதினா, கொத்துமல்லியை சேர்த்து உடன் வதக்கவும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியைச் சேர்த்து மீண்டும் ஒரு முறை வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வதக்கி, மீண்டும் தயிரை ஊற்றி வதக்கி, பிறகு அதில் கொத்துக் கறியையும் போட்டு நன்றாக வதக்கவும். இப்போது கொத்துக்கறி கலவை நன்றாக வதக்கியதும், அதனுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேகவிட்டு, கறி வெந்ததும் அதன் மீது வடித்து வைத்துள்ள சாதத்தைப் பரப்பி, அதன் மீது மீதமுள்ள புதினா, கொத்துமல்லி ஆகிய இவற்றை எல்லாம் போட்டுப், பாத்திரத்தை ஈரத்துணியால் மூடி, தட்டு வைத்து, ஸ்டவ்வை ஸிம்மில் வைத்து 25 நிமிடம் விட்டு விட வேண்டும். இதோ இப்போது ஈரத்துணி நன்றாக உலர்ந்ததும், பிரியாணி நன்கு வெந்து இருக்கும். இதோ இப்போது சுவையான செட்டிநாடு கொத்துக்கறி பிரியாணி சுடச் சுடத் தயார்.

டாபிக்ஸ்