டிஃபரண்ட் செட்டிநாடு நீட்டு கத்தரிக்காய் வறுவல்! இப்பவே ட்ரை பண்ணி பாருங்க! மாஸ் ரெசிபி!
உலக அளவில் செட்டிநாடு சமையல்கள் மிகவும் விரும்பப்படும் ரெசிபியாக இருந்து வருகிறது. செட்டிநாடு ஸ்பெஷல் உணவுகளில் ஒன்றான செட்டிநாடு நீட்டு கத்தரிக்காய் வறுவல் செய்வதை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தமிழர்களுக்கு கொண்டாட்டம் என்றாலே உணவு தான், அந்த அளவிற்கு உணவின் மீது அவர்களுக்குத் தனி காதல் உண்டு. அதிலும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குறிப்பிட்ட உணவு முறை பிரபலமாக இருந்து வருகிறது. அந்த உணவு முறை மிகவும் தனித்துவம் வாய்ந்ததகவும், சுவை மிகுந்ததாகவும் இருக்கும். இந்த வரிசையில் காரைக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஒரு உணவு ஸ்டைல் தான் செட்டிநாடு உணவு வகைகள். தமிழ்நாடு மட்டும் அல்லாது உலக அளவில் செட்டிநாடு சமையல்கள் மிகவும் விரும்பப்படும் ரெசிபியாக இருந்து வருகிறது. செட்டிநாடு ஸ்பெஷல் உணவுகளில் ஒன்றான செட்டிநாடு நீட்டு கத்தரிக்காய் வறுவலை சற்று மாற்றங்களுடன் செய்தால் சுவை அருமையாக இருக்கும். இதனை எப்படி செய்வதை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
2 நீள வடிவிலான கத்திரிக்காய்
5 வற மிளகாய்
சிறிய அளவிலான இஞ்சி துண்டு
2 பல் பூண்டு
2 டீஸ்பூன் சோள மாவு
2 டீஸ்பூன் ஸ்வீட் அண்ட் ஸ்பைசி சாஸ்
3 டீஸ்பூன் சோயா சாஸ்
1 டீஸ்பூன் வினிகர்
தேவையான அளவு எண்ணெய்
சிறிதளவு கொத்தமல்லி இலை
சிறிதளவு வெள்ளை எள்ளு
தண்ணீர்
செய்முறை
முதலில் நீட்ட அளவிலான கத்திரிக்காயை எடுத்து, விதைகளை அகற்றி, நீள வாக்கில் வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி தண்ணீர் சேர்த்து கலக்கவும். பின்னர் இந்த பாத்திரத்தில் சோள மாவு சேர்த்து கத்தரிக்காய துண்டுகளை மாவில் பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மாவில் பிரட்டி எடுத்த கத்திரிக்காயை சூடான எண்ணெயில் பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். பின்னர் மற்றொரு சிறிய பாட்த்திரத்தில் ஸ்வீட் & ஸ்பைசி சாஸ் அல்லது தக்காளி கெட்சப், சோயா சாஸ், வினிகர் மற்றும் தண்ணீர் சேர்த்து அனைத்தையும் நன்கு கலக்க வேண்டும். பின்னர் ஒரு அகன்ற கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும்.
எண்ணெய் சூடானதும் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டு, பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் நறுக்கிய வற மிளகாயை சேர்த்து, நன்கு வறுக்கவும். பின்னர் இதில் சாஸ் கலவையை சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக நன்கு கிளறி விட வேண்டும். இந்த சாஸ் கெட்டியாகும் பதம் வந்ததும் அதில் முன்னதாக பொரித்து வைத்திருந்த கத்தரிக்காயை சேர்த்து கிளறி விடவும். மேலும் சில கொத்தமல்லி தழைகளை சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இந்த சமயத்தில் சிறிது வெள்ளை எள்ளு சேர்த்து கலக்கவும். சில நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விட்டு இறக்கவும். இப்பொழுது வித்தியாசமான முறையில் செய்யப்பட்ட செட்டிநாடு நீட்டு கத்திரிக்காய் வறுவல் சூடாக பரிமாற தயாராக உள்ளது. இதனை வித்தியாசமான முறையில் சாஸ்களை சேர்த்து செய்வதால் மிகவும் சுவையானதாக இருக்கும். நீங்களும் இதனை ட்ரை செய்து பார்த்து மகிழுங்கள். இது போன்ற பல வித்தியாசமான காய்கறிகளுடன் இதே ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்கள்.
டாபிக்ஸ்