Simple Kuruma: சட்டுனு செய்யலாம் இந்த சப்பாத்தி குருமா! செஞ்சு அசத்துங்க! இதோ சிம்பிள் ரெசிபி!
Simple Kuruma:சப்பாத்தி என்றால் அதற்கு உடன் சாப்பிடும் ஒரே இணை உணவு குருமா தான். ஆனால் சிலருக்கு குருமா செய்யத் தெரியாது. ஹோட்டல்களில் செய்யப்படுவது போல ருசியான குருமா எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம்.

காலை மற்றும் மாலை நேரங்களில் உணவாக சப்பாத்தி சாப்பிடுவது நலல உணவு பழக்கம் ஆகும். இதில் அதிக கலோரிகள் இல்லாத காரணத்தால் சப்பாத்தி சாப்பிடுவாதிக்கு நல்லது என உணவியல் நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர். இந்த சப்பாத்திக்கு பல விதமான சைட்டிஷ்கள் உள்ளன. ஆனால் சப்பாத்தி என்றால் அதற்கு உடன் சாப்பிடும் ஒரே இணை உணவு குருமா தான். ஆனால் சிலருக்கு குருமா செய்யத் தெரியாது. ஆனால் சிம்பிள் ஆக ஒரு குருமா செய்யலாம். இது சாப்பிடுவதற்கும் சுவையாக இருக்கும். ஹோட்டல்களில் செய்யப்படுவது போல ருசியான குருமா எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம்.
தேவையான பொருள்கள்
2 காரட்
2 உருளைக் கிழங்கு
15 முதல் 20 பீன்ஸ்
கால் கப் பச்சை பட்டாணி
1 கத்திரிக்காய்
4 பச்சை மிளகாய்
சிறிய அளவிலான இஞ்சி துண்டு
அரை கப் துருவிய தேங்காய்
1 லவங்கப்பட்டை
1 பிரிஞ்சு இலை
அரை டீஸ்பூன் சோம்பு
ஒரு பெரிய வெங்காயம்
சிறிதளவு கொத்தமல்லி தழை
5 பல் பூண்டு
அரை டீஸ்பூன் மல்லித் தூள்
அரை டீஸ்பூன் கசகசா
10 முதல் 12 முந்திரிப் பருப்பு
3 கிராம்பு
5 ஏலக்காய்
அரை கப் தயிர்
தேவையான அளவு உப்பு
செய்முறை
முதலிள் காய்கறிகளை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அவற்றை தண்ணீரில் சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் அல்லது ஒரு குக்கரில் நறுக்கிய காய்கறிகள் மற்றும் பட்டாணியை சேர்த்து தேவையானா அளவு தண்ணீரை ஊற்றி ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து நன்கு வேக வைக்கவும். வெந்த பின்னர் தேவையான அளவு உப்பு போட வேண்டும். காய்கறிகள் குழையாமல் இருக்க வேண்டும். அப்போது தான் குருமாவிற்கு நன்றாக இருக்கும். பின்னர் பச்சை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லி, பூண்டு, மல்லி, துருவிய தேங்காய், ஒரு துண்டு லவங்கப்பட்டை, சோம்பு இவைகளைத் தேவையான அளவு தண்ணீர் விட்டு மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். பின்னர் மீண்டும் மிக்சியில் கசகசா, முந்திரிப் பருப்பு ஆகியவற்றையும் நீர் விட்டு அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு சூடாக்கவும். நெய் சூடானதும் அதில் லவங்கப்பட்டை, பொடித்த ஏலக்காய் இவற்றை எல்லாம் போட்டு வறுத்து, உடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கவும். அதன் பிறகு, முன்பு அரைத்து வைத்திருந்த இரண்டு விழுதுகளையும் போட்டு தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேவையா அளவு உப்பையும் உடன் போட்டு நன்கு கொதிக்க விடவும். இவை அனைத்தும் கொதித்த பின்னர் வேக வைத்திருக்கும் காய்கறிகளை எல்லாம் போட்டு மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி விட வேண்டும். பின்னர் சிறிது நேரம் ஆற வைத்து மேற்கண்டவற்றுடன் விரும்பினால் தயிர் சேர்க்க வேண்டும். இது மிகவும் சுவையானதாக இருக்கும்.

டாபிக்ஸ்