சிறப்பான ஈவினிங் நேர ஸ்நாக்ஸ்க்கு இது தான் பெஸ்ட் சாய்ஸ்!காலிஃபிளவர் பக்கோடா! இதோ ஈசி ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சிறப்பான ஈவினிங் நேர ஸ்நாக்ஸ்க்கு இது தான் பெஸ்ட் சாய்ஸ்!காலிஃபிளவர் பக்கோடா! இதோ ஈசி ரெசிபி!

சிறப்பான ஈவினிங் நேர ஸ்நாக்ஸ்க்கு இது தான் பெஸ்ட் சாய்ஸ்!காலிஃபிளவர் பக்கோடா! இதோ ஈசி ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Dec 18, 2024 01:24 PM IST

மாலை நேரம் வந்து விட்டாலே நம் அனைவருக்கும் ஏதாவது சாப்பிட வேண்டும் என தோன்றும். சுட சுட டீ அல்லது காபியுடன் சிற்றுண்டி இருந்தால் அந்த நாள் முழுமையடைந்து விடும். அந்த அளவிற்கு நம் மக்கள் மாலை நேர சிற்றுண்டியை விரும்புகிறார்கள்.

சிறப்பான ஈவினிங் நேர ஸ்நாக்ஸ்க்கு இது தான் பெஸ்ட் சாய்ஸ்!காலிஃபிளவர் பக்கோடா! இதோ ஈசி ரெசிபி!
சிறப்பான ஈவினிங் நேர ஸ்நாக்ஸ்க்கு இது தான் பெஸ்ட் சாய்ஸ்!காலிஃபிளவர் பக்கோடா! இதோ ஈசி ரெசிபி! (Yummy Tummy Aarthi)

தேவையான பொருட்கள்

500 கிராம் காலிபிளவர் 

1 கப் கடலை மாவு 

அரை கப் அரிசி மாவு 

அரை டீஸ்பூன் மஞ்சள்தூள்

2 டீஸ்பூன் மிளகாய் 

2 டீஸ்பூன் உப்பு 

2 டீஸ்பூன் கொத்தமல்லி தூள் 

1 டீஸ்பூன் கரம் மசாலா தூள் 

அரை டீஸ்பூன் சீரகம் 

2 முதல் 4 பச்சை மிளகாய் 

ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை

1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 

ஒரு பெரிய வெங்காயம்

தேவையான அளவு தண்ணீர்

சமையல் சோடா

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் காலிஃப்ளவரை சுத்தம் செய்து போட வேண்டும். பின்னர் இந்த தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் பொடியும், சிறிதளவு உப்பும் போட்டு இரண்டு முதல் நான்கு நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் தண்ணீரை வடிகட்டி தனியாக காலிபிளவரை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு அகன்ற பாத்திரத்தை எடுத்து அதில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், பெருங்காயத்தூள் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சிறிதளவு கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது மேலும் நறுக்கிய வெங்காயம் ஆகிய எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.  இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவு பதத்தில் கலந்து கொள்ள வேண்டும். 

 பின்னர் நாம் சிறிது நேரம் வேகவைத்து எடுத்த காலிஃப்ளவரை இதில் போட வேண்டும். பின்னர் ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து இதனை நன்கு கலக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் எண்ணெயை ஊற்ற வேண்டும். என்னை சூடானதும் நாம் கலந்து வைத்த காலிஃப்ளவரை ஒன்றாக மெதுவாக எண்ணெயில் போட வேண்டும். இந்த காலிபிளவர் முழுமையாக பொன்னிறமாக மாறியதும் எடுத்து வைக்க வேண்டும். இதே முறையில் அனைத்து காலிஃப்ளவரையும் பொறித்து எடுக்க வேண்டும். இந்த பக்கோடாவை எண்ணெய் வடிந்த பின்பு எடுத்து அதன் மேல் பொறித்த பச்சை மிளகாய் மற்றும் பொறித்த கறிவேப்பிலை ஆகியவற்றை தூவி எடுத்து வைத்துக் கொள்ளவும். சூடான காலிஃப்ளவர் பக்கோடா தயார் இதனை நீங்களும் உங்கள் வீடுகளில் செய்து பார்த்து மகிழுங்கள். மாலை நேர டீயுடன் சேர்ந்து சாப்பிட இந்த காலிபிளவர் பக்கோடா சரியான ஸ்நாக்ஸ் ஆகும். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.