Cabbage Masala Kootu: முட்டைக்கோசை இப்படி செஞ்சு பாருங்க! சுவை அள்ளும்! மனசு துள்ளும்! முட்டைக்கோஸ் மசாலா கூட்டு ரெசிபி!
Cabbage Masala Kootu: முட்டைக்கோஸ் அனைத்தையும் குழந்தைகள் சாப்பிடுவதில்லை மிகவும் வெறுக்கின்றனர். அவர்களுக்கு பிடித்தார் போல் மசாலாக்கள் சேர்த்து முட்டைக்கோசை செய்து தரும்போது எளிமையாக அவர்களால் உண்ண முடியும். அத்தகைய முட்டைகோஸ் மசாலா கூட்டு செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.

தினமும் குறைந்தது 2 வகையான காய்கறிகளையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நாமும் நமது உடல் நலனை பராமரிப்பதற்கு காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் நம் வீட்டில் உள்ள குழந்தைகள் உணவில் சேர்க்கப்படும் காய்கறிகளை முழுதாக சாப்பிடுவதில்லை. மேலும் நாம் தயாரித்து தரும் பொரியல், அவியல் போன்றவைகளில் உள்ள காய்கறிகளையும் சாப்பிடுவதில்லை. அதற்கு காரணம் அதன் சுவை அவர்கள் விரும்பும் படியாக இருப்பதில்லை. எனவே குழந்தைகள் விரும்பும் படி புதுவிதமாக காய்கறிகளை சமைத்துக் கொடுத்தால் மட்டுமே அவர்களது உடலில் காய்கறிகளின் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
முட்டைக்கோஸ் என்பது நமது வீட்டில் அன்றாடம் பலமுறை செய்யும் ஒரு காய்கறி ஆகும். வீட்டில் ஏதேனும் விசேஷம் என்றாலும் கல்யாண வீடுகளிலும், பெரும்பாலும் போடப்படும் ஒரு கூட்டாக முட்டைக்கோஸ் கூட்டு உள்ளது. ஆனால் இந்த முட்டைக்கோஸ் அனைத்தையும் குழந்தைகள் சாப்பிடுவதில்லை மிகவும் வெறுக்கின்றனர். அவர்களுக்கு பிடித்தார் போல் மசாலாக்கள் சேர்த்து முட்டைக்கோசை செய்து தரும்போது எளிமையாக அவர்களால் உண்ண முடியும். அத்தகைய முட்டைகோஸ் மசாலா கூட்டு செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
2 கப் முட்டைகோஸ்
4 பெரிய வெங்காயம்
கால் கப் பாசிப்பருப்பு
ஒரு துண்டு பட்டை
2 கிராம்பு
2 ஏலக்காய்
ஒரு கப் துருவிய தேங்காய்
4 வற மிளகாய்
1 கைப்பிடி அளவு கொத்தமல்லி தழை
5 டீஸ்பூன் எண்ணெய்
ஒரு டீஸ்பூன் கடுகு
ஒரு டீஸ்பூன் உளுந்து
ஒரு டீஸ்பூன் சீரகம்
ஒரு கொத்து கறிவேப்பிலை
தேவையான அளவு உப்பு
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வையத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடக்கவும். எண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் இதில் போட்டு வதக்கி விட வேண்டும். பின்னர் இதில் பாசிப்பருப்பைப் போட்டு வேகவைக்க வேண்டும். இவை அனைத்தும் முக்கால் பதம் வெந்த பின்னர், அதில் நறுக்கி வைத்துள்ள முட்டைகோஸை போட வேண்டும். இவை இரண்டும் சேர்ந்து வெந்த பின்னர அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் வற மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதில் துருவிய தேங்காய் சேர்த்து அரைத்து வெந்த கலவையில் கொட்ட வேண்டும். பின்னர் தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க வைக்க வேண்டும். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளித்து எடுத்துக் கொள்ளவும். தாளித்த இதனை வெந்து கொண்டிருக்கும் கலவையில் கொட்டவும். இதை நன்றாக கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி கொத்துமல்லித்தழைத் தூவி சாப்பிட பயன்படுத்தவும். இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள இது நன்றாக இருக்கும். இதனை உங்களது வீட்டில் ட்ரை செய்து பார்த்து மகிழுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

டாபிக்ஸ்