பர்மா ஸ்டைல் ஸ்ட்ரீட் ஃபுட்னா இது தான் பெஸ்ட்! முட்டை பேஜோ செய்வது எப்படி? இதோ அசத்தலான ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பர்மா ஸ்டைல் ஸ்ட்ரீட் ஃபுட்னா இது தான் பெஸ்ட்! முட்டை பேஜோ செய்வது எப்படி? இதோ அசத்தலான ரெசிபி!

பர்மா ஸ்டைல் ஸ்ட்ரீட் ஃபுட்னா இது தான் பெஸ்ட்! முட்டை பேஜோ செய்வது எப்படி? இதோ அசத்தலான ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Published Jun 05, 2025 09:53 AM IST

மாலை நேரத்தில் சிற்றுண்டி சாப்பிட வேண்டும் என்றால் இந்த புரதம் நிறைந்த முட்டை பேஜோ செய்து சாப்பிடுங்கள். இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இன்று பர்மா ஸ்டைல் முட்டை பேஜோ எப்படி செய்வது என்பதை இங்கு தெரிந்துக் கொள்ளலாம்.

பர்மா ஸ்டைல் ஸ்ட்ரீட் ஃபுட்னா இது தான் பெஸ்ட்! முட்டை பேஜோ செய்வது எப்படி? இதோ அசத்தலான ரெசிபி!
பர்மா ஸ்டைல் ஸ்ட்ரீட் ஃபுட்னா இது தான் பெஸ்ட்! முட்டை பேஜோ செய்வது எப்படி? இதோ அசத்தலான ரெசிபி!

தேவையான பொருட்கள்

10 வேகவைத்த முட்டை

2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

2 பெரிய வெங்காயம்

10 முதல் 15 பல் பூண்டு

10 முதல் 15 காய்ந்த சிவப்பு மிளகாய்

4 டேபிள்ஸ்பூன் உப்பு கரைத்த தண்ணீர்

2 டீஸ்பூன் எலுமிச்சை தண்ணீர்

கால் கப் புளி தண்ணீர்

ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை

செய்முறை

முதலில் முட்டை பேஜோ செய்ய, ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும், அதில் வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய் போட்டு பொரித்து எடுத்து வைக்கவும். காய்ந்த மிளகாய் ஆறிய பின் அதை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் பொரித்த பூண்டை பொடித்து போடவும். இதனுடன் பொரித்த வெங்காயம், அரைத்த காய்ந்த மிளகாய் பொடியை தேவையான அளவு கலந்து வைக்கவும்.

இப்பொழுது முட்டையை வேக வைத்து தோலுரித்து எடுத்து வைக்கவும். வேகவைத்த முட்டையின் நடுவில் சிறிதளவு வெட்டி அதனுள் பொரித்த வெங்காயம் பூண்டு கலவையை வைக்கவும் இதன்மேல் எலுமிச்சை சாறு, புளித்தண்ணீர், பொரித்த எண்ணெய், உப்பு கரைத்த தண்ணீர் போடவும். இவை அனைத்தையும் சில துளிகள் மட்டும் போட வேண்டும். இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். இந்த சுவையான முட்டை பேஜோவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொடுக்கலாம்.