உங்கள் வீட்டில் பிரட் இருக்கா? அப்போ ஈஸியா செய்யலாம் சுவையான அல்வா! இதோ சூப்பாரான ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உங்கள் வீட்டில் பிரட் இருக்கா? அப்போ ஈஸியா செய்யலாம் சுவையான அல்வா! இதோ சூப்பாரான ரெசிபி!

உங்கள் வீட்டில் பிரட் இருக்கா? அப்போ ஈஸியா செய்யலாம் சுவையான அல்வா! இதோ சூப்பாரான ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Jan 02, 2025 02:35 PM IST

வீட்டில் எளிமையான முறையில் அல்வா செய்ய முடியும். உங்கள் வீட்டில் பிரட் இருந்தால் போதும் இந்த அல்வா செய்வதற்கு, அல்வா செய்யும் எளிமையான முறையை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

உங்கள் வீட்டில் பிரட் இருக்கா? அப்போ ஈஸியா செய்யலாம் சுவையான அல்வா! இதோ சூப்பாரான ரெசிபி!
உங்கள் வீட்டில் பிரட் இருக்கா? அப்போ ஈஸியா செய்யலாம் சுவையான அல்வா! இதோ சூப்பாரான ரெசிபி! (Pexel)

இதனால் நம் மக்கள் பேக்கரிகளில் சென்று அல்வாவை வாங்கி வருகின்றனர். ஒரு சில பேக்கரிகளை தவிர பல பேக்கரிகளில் இனிப்பு உணவுகளை சரியான அளவில் யாரும் தயார் செய்வதில்லை.  வீட்டில் எளிமையான முறையில் அல்வா செய்ய முடியும். உங்கள் வீட்டில் பிரட் இருந்தால் போதும் இந்த அல்வா செய்வதற்கு, அல்வா செய்யும் எளிமையான முறையை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

தேவையான பொருட்கள் 

7 முதல் 8 பிரட் துண்டுகள் 

400 கிராம் அளவுள்ள சர்க்கரை 

500 கிராம் நெய் 

சிறிதளவு முந்திரி பருப்பு 

சிறிதளவு பாதாம் பருப்பு 

அரை லிட்டர் பால் 

சிறிதளவு ஏலக்காய் தூள்

செய்முறை 

பிரட் அல்வா செய்வதற்கு முதலில் பிரட் பிரட்டை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் அதில் நெய்யை ஊற்றி சூடானதும் பிரட்டுகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே நெய்யில் மீண்டும் சிறிதளவு நெய்யை சேர்த்து முந்திரி பருப்பு மற்றும் பாதாம் பருப்பை நறுக்கி சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி மேலும் சர்க்கரை சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் அளவிற்கு சர்க்கரை பாகை தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் சர்க்கரை பாகை நாம் வறுத்து வைத்திருந்த பிரட் துண்டுகளோடு கலந்து நன்றாக கலக்கவும். பின்னர் காய்ச்சி ஆற வைத்த பாலை எடுத்து இந்த பிரட் தூண்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

 இவை அனைத்தும் மிதமான சூட்டில் வைத்து அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டு இருக்க வேண்டும். நடுவே நெய் சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக ஏலக்காயை பொடி செய்து இதில் சேர்க்க வேண்டும். மேலும் நாம் நெய்யில் வறுத்து வைத்திருந்த முந்திரி மற்றும் பாதாம் பருப்புகளை இதில் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். நெய் தனியாக பிரிந்து வரும் தருவாயில் அடுப்பை அணைத்து வைத்துவிட்டு அதனை அப்படியே மூடி வைக்க வேண்டும். இப்பொழுது சுவையான மற்றும் மிருதுவான பிரட் அல்வா தயார். உங்கள் வீடுகளில் உள்ளவர்களுக்கு இந்த பிரெட் அல்வாவை செய்து கொடுத்த மகிழுங்கள். பண்டிகை காலங்களிலும் இந்த பிரட் அல்வாவை முயற்சி செய்து பாருங்கள். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.