சட்டுனு செய்யலாம் பிரட் போண்டா! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க! ஈசி ரெசிபி!
மாலை நேரம் வந்து விட்டாலே எதாவது சாப்பிட வேண்டுமென்று தான் நம்மில் பலருக்குத் தோன்றும். இப்படி தோன்றிய உடன் கடைகளில் இருந்து சுத்தமாக செய்யப்படாத பண்டங்களை வாங்கி திண்பது எல்லாருக்கும் எளிதான காரியம் தான்.
மாலை நேரம் வந்து விட்டாலே எதாவது சாப்பிட வேண்டுமென்று தான் நம்மில் பலருக்குத் தோன்றும். இப்படி தோன்றிய உடன் கடைகளில் இருந்து சுத்தமாக செய்யப்படாத பண்டங்களை வாங்கி திண்பது எல்லாருக்கும் எளிதான காரியம் தான். ஆனால் அந்த உணவால் வரும் வயிற்றுத் தொந்தரவுகளை தான் நம்மால் சமாளிக்க முடியாமல் போகி விடும். வீட்டிலேயே எளிமையான சுவையான பிரட் போண்டா செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
6 பிரெட் துண்டுகள்
1 கேரட்
கால் கப் பட்டாணி
1 பெரிய வெங்காயம்
3 பூண்டு பல்
1 இஞ்சி துண்டு
1 கிராம்பு
1 பட்டை
1 டீஸ்பூன் சோம்பு
1 டீஸ்பூன் சீரக தூள்
1 டீஸ்பூன் கரம் மசாலா
தேவையான அளவு மிளகாய் தூள்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்
சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த உருளைக் கிழங்கை மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் சோம்பு, கிராம்பு, மற்றும் பட்டையை போட்டு வதக்கி விடவும். பின்னர் அதில் கிராம்பு, பட்டையை வெளியே எடுத்து விடவும். பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் நறுக்கிய கேரட், பட்டாணி, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும். அடுத்து அதில் சீரகத்அதை நன்கு கிளறவும்.இப்பொழுது இதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு நன்கு கிளறி வேக விடவும். தண்ணீர் வற்றியவுடன் அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி கிளறி இறக்கி விடவும். பிறகு உருளைக்கிழங்கு மசாலாவை எடுத்து அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்து கொள்ளவும். பின்னர் பிடித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மசாலா உருண்டைகளை ஒவ்வொன்றாக பிரெட்களின் நடுவில் வைத்து அதை நன்கு உருண்டையாக உருட்டி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சுட்ட பின் அதில் உருண்டைகளை போட்டு இரு புறமும் வெந்த பின் எடுத்துக் கொள்ளவும். அதை நன்கு பொன்னிறமானதும் அதை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து அதை ஒரு தட்டில் வைத்து சுட சுட சட்னியுடன் அல்லது கெட்சப்புடன்னோ பரிமாறவும். இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான பிரட் போண்டா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
டாபிக்ஸ்