பாகற்காய் சாப்பிட பிடிக்க வில்லையா? அப்போ இந்த மாதிரி வறுவல் செய்து சாப்பிடலாம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பாகற்காய் சாப்பிட பிடிக்க வில்லையா? அப்போ இந்த மாதிரி வறுவல் செய்து சாப்பிடலாம்!

பாகற்காய் சாப்பிட பிடிக்க வில்லையா? அப்போ இந்த மாதிரி வறுவல் செய்து சாப்பிடலாம்!

Suguna Devi P HT Tamil
Published Jun 18, 2025 10:02 AM IST

பாகற்காய் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் குடல் புழுக்கள் பிரச்சனை தீரும். பாகற்காய் வைத்து சுவையான வறுவல் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பாகற்காய் வறுவலை சூடான சாதம், இட்லி மற்றும் தோசை என பல விதமான உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.

பாகற்காய் சாப்பிட பிடிக்க வில்லையா? அப்போ இந்த மாதிரி வறுவல் செய்து சாப்பிடலாம்!
பாகற்காய் சாப்பிட பிடிக்க வில்லையா? அப்போ இந்த மாதிரி வறுவல் செய்து சாப்பிடலாம்!

தேவையான பொருட்கள்

பாகற்காய் - 300 கிராம் நறுக்கியது

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பில்லை

உப்பு - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

சீரக தூள் - 1 தேக்கரண்டி

தனியா தூள் - 1 தேக்கரண்டி

உடைத்த கடலை - 1 மேசைக்கரண்டி

தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி

பூண்டு - 1 பெரிய பல்

சீரகம் - 1/2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 3

செய்முறை:

பாகற்காயை விதைகளுடன் நறுக்கவும். அகல கடாயில் எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பில்லை போட்டு தாளிக்கவும். இதில் நறுக்கிய பாகற்காயை போட்டு வதக்கவும். அதிக சூட்டில் பாகற்காயை வதக்கவும். பாகற்காய் பாதி வெந்ததும், இதில் உப்பு சேர்த்து வதக்கவும்.

தீயை குறைத்து, இதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், சேர்த்து கிளறவும். மிக்ஸியில் உடைத்த கடலை, தேங்காய் துருவல், பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாய், சேர்த்து பொடியாக அரைக்கவும். பாகற்காய் பொன்னிறமானதும், அதில் அரைத்த பொடியை, போட்டு 1 நிமிடம் கிளறவும். பாகற்காய் ப்ரை தயார்.