வழக்கமான இனிப்பு உணவுகள் சலித்து விட்டதா? அப்போ பூடான் ஸ்பெஷல் மால்புவா ட்ரை பண்ணி பாருங்கள்! ரெசிபி உள்ளே!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வழக்கமான இனிப்பு உணவுகள் சலித்து விட்டதா? அப்போ பூடான் ஸ்பெஷல் மால்புவா ட்ரை பண்ணி பாருங்கள்! ரெசிபி உள்ளே!

வழக்கமான இனிப்பு உணவுகள் சலித்து விட்டதா? அப்போ பூடான் ஸ்பெஷல் மால்புவா ட்ரை பண்ணி பாருங்கள்! ரெசிபி உள்ளே!

Suguna Devi P HT Tamil
Published Apr 03, 2025 12:36 PM IST

நாம் வழக்கமாக சாப்பிடும் உணவுகளை காட்டிலும் வித்தியாசமான புதிய வகை உணவுகளை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என எண்ணம் தோன்றலாம். அந்த வகையில் பூடான் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் பிரபலமான ஒரு இனிப்பு உணவு உள்ளது. அது தான் மால்புவா, இதனை எப்படி செய்வது என இன்று தெரிந்துக் கொள்வோம்.

வழக்கமான இனிப்பு உணவுகள் சலித்து விட்டதா? அப்போ பூடான் ஸ்பெஷல் மால்புவா ட்ரை பண்ணி பாருங்கள்! ரெசிபி உள்ளே!
வழக்கமான இனிப்பு உணவுகள் சலித்து விட்டதா? அப்போ பூடான் ஸ்பெஷல் மால்புவா ட்ரை பண்ணி பாருங்கள்! ரெசிபி உள்ளே!

தேவையான பொருட்கள்

ஒரு கப் கோதுமை மாவு

கால் கப் ரவை

ஒரு டேபிள்ஸ்பூன் பொடியாக்கிய சர்க்கரை

அரை டீஸ்பூன் ஏலக்காய் தூள்

அரை டீஸ்பூன் சோம்பு தூள்

2 கப் பால்

சர்க்கரை சிரப் செய்ய

ஒன்றரை கப் சர்க்கரை

ஒரு கப் தண்ணீர்

சிறிதளவு குங்குமப்பூ

கால் கப் எண்ணெய்

செய்முறை

முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை, பொடியாக்கிய சர்க்கரை, ஏலக்காய் தூள், சோம்பு தூள் ஆகியவற்றை  சேர்த்து நன்கு கலக்கவும். அடுத்து அதில் பாலை காய்ச்சி ஆற வைத்து இதில் சேர்க்க வேண்டும். அதை அரை மணி நேரம் வைர அப்படியே ஊறவைக்க வேண்டும். பின்னர் வேறு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்து கொதி வந்ததும், குங்குமப்பூ சேர்க்கவும். பின்னர் இந்த சர்க்கரை பாகில் 5 நிமிடம் கொதிக்க விடவும். இது கெட்டியான சிரப்பாக காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் ஒரு கரண்டி நிறைய மாவை எடுத்து  ஊற்றவும்.

முதலில் ஒரு பக்கத்தில் ஐந்து நிமிடங்கள் வறுக்கவும், மறுபுறம் அதை புரட்டவும். இருபுறமும் நன்றாக வெந்ததும் எண்ணெயில் இருந்து எடுக்கவும். பின்னர் இந்த மால்புவாவை சர்க்கரை பாகில் 20 நிமிடம் ஊற வைக்கவும். 20 நிமிடம் கழித்து ஊறியவுடன் பாகில் இருந்து எடுத்து பரிமாறவும். நறுக்கிய பிஸ்தாவை இதன் மேல் தூவி அலங்கரிக்கவும். சுவையான மால்புவா தயார். இதனை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பார்த்து சாப்பிடுங்கள். இது போன்று வெவ்வேறு நாடுகளின் உணவை செய்து சாப்பிடலாம். அப்போது தான் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அவர்களும் வெளியில் கடைகளுக்கு செல்ல மாட்டார்கள்.