பிடிவாதக் குழந்தைகளுக்கு பீட்ரூட் லட்டு செஞ்ச கொடுங்க! சட்டுனு செய்யலாம்! செம ஈசி ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பிடிவாதக் குழந்தைகளுக்கு பீட்ரூட் லட்டு செஞ்ச கொடுங்க! சட்டுனு செய்யலாம்! செம ஈசி ரெசிபி!

பிடிவாதக் குழந்தைகளுக்கு பீட்ரூட் லட்டு செஞ்ச கொடுங்க! சட்டுனு செய்யலாம்! செம ஈசி ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Published Oct 09, 2024 01:34 PM IST

குழந்தைகள் விரும்பும் இனிப்பு பண்டமான லட்டு செய்யும் போது இந்த பீட்ரூட்டை சேர்த்து செய்து கொடுக்கலாம். இதனை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். இதற்கு வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே போதும்.

பிடிவாதக் குழந்தைகளுக்கு பீட்ரூட் லட்டு செஞ்ச கொடுங்க! சட்டுனு செய்யலாம்! செம ஈசி ரெசிபி!(cookpad)
பிடிவாதக் குழந்தைகளுக்கு பீட்ரூட் லட்டு செஞ்ச கொடுங்க! சட்டுனு செய்யலாம்! செம ஈசி ரெசிபி!(cookpad)

குழந்தைகள் விரும்பும் இனிப்பு பண்டமான லட்டு செய்யும் போது இந்த பீட்ரூட்டை சேர்த்து செய்து கொடுக்கலாம். இதனை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். இதற்கு வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே போதும். மாலை நேரங்களில் பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு பீட்ரூட் லட்டு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அதன் ஈஸியான ரெசிபியை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள். 

தேவையான பொருட்கள் 

ஒரு பெரிய சைஸ் பீட்ரூட் 

அரை கப் நெய் 

துருவிய தேங்காய்

ஒரு கப் சர்க்கரை

6 ஏலக்காய்

செய்முறை 

முதலில் ஒரு பெரிய பீட்ரூட்டை தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சேர்க்கமால் அரைக்க வேண்டும். அரைத்த இந்த பேஸ்டை ஒரு துணியில் போட்டு நன்கு பிழிந்து பீட்ரூட் சாற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சர்க்கரை மற்றும் ஏலக்காய் துண்டுகளை ஒரு மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் நெய் ஊற்றி காய விட வேண்டும். சூடானதும் அதில் ரவையை போட்டு வறுத்து உதிரி உதிரியாக இருக்குமாறு வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ரவையை வறுத்துக் கொண்டிருக்கும் போதே அதில் அரைத்த சர்க்கரை பொடியை போட்டு கலக்க வேண்டும். அதில் அரை முடி தேங்காயை துருவி எடுத்து கலக்க வேண்டும். பின்னர் இறுதியாக எடுத்து வைத்திருந்த பீட்ரூட் சாற்றையும் சேர்த்து கிளற வேண்டும். இவை அனைத்தையும் ரவை சற்று சூடாக இருக்கும் போதே செய்ய வேண்டும். அப்போதுதான் லட்டு பதத்திற்கு உருண்டை பிடிக்க முடியும்.  இப்போது மிதமான சூட்டில் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்க வேண்டும். இப்போது சுவையான மற்றும் சத்தான பீட்ரூட் லட்டு தயார். இதனை உங்கள் வீடுகளில் எளிமையாக செய்யலாம். மேலும் சர்க்கரை குறைவாக வேண்டும் என நினைப்பவர்கள் சர்க்கரை அளவை குறைத்தும் செய்யலாம். வீட்டுக் குழந்தைகளுக்கு இதனை செய்து தருவதால் எளிமையாக பீட்ரூட் ஜூஸ் குடிக்க வைக்க முடியும். பீட்ரூட் சாப்பிட முடியாது என அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த டிரிக்ஸை உபயோகித்து பாருங்கள்.