Banana Stem Poriyal: மருத்துவ குணம் கொண்ட வாழைத்தண்டு பொரியல்! மாஸ் ரெசிபி இதோ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Banana Stem Poriyal: மருத்துவ குணம் கொண்ட வாழைத்தண்டு பொரியல்! மாஸ் ரெசிபி இதோ!

Banana Stem Poriyal: மருத்துவ குணம் கொண்ட வாழைத்தண்டு பொரியல்! மாஸ் ரெசிபி இதோ!

Suguna Devi P HT Tamil
Jan 23, 2025 01:57 PM IST

Banana Stem Poriyal: நமது உடலில் ஏற்படும் ஒரு பிரதான பிரச்சனையான சிறுநீரக கற்களை வாழைத்தண்டு சாப்பிட்டால் குணப்படுத்த முடியும். ஆனால் வாழைத் தண்டை வைத்து சமையல் செய்து கொடுத்தால் யாரும் சாப்பிடுவதில்லை. எல்லாரும் விரும்புமாறு சுவையான வாழைத்தண்டு பொரியல் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்

Banana Stem Poriyal: மருத்துவ குணம் கொண்ட வாழைத்தண்டு பொரியல்! மாஸ் ரெசிபி இதோ!
Banana Stem Poriyal: மருத்துவ குணம் கொண்ட வாழைத்தண்டு பொரியல்! மாஸ் ரெசிபி இதோ! (Cookpad)

தேவையான பொருள்கள்

ஒரு பெரிய வாழைத்தண்டு

கால் கப் பயத்தம் பருப்பு

2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு

அரை டீஸ்பூன் கடுகு

 அரை கப் துருவிய தேங்காய்

தேவையான அளவு உப்பு

4 வற  மிளகாய்

அரை கப் மோர்

 தேவையான அளவு தண்ணீர்

 தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

முதலில் வாழைத்தண்டை நாரை உரித்து உள்ளே இருக்கும் சதைப் பகுதியினை  நீளமான துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் பயத்தம் பருப்பு, தேவையான அளவு உப்பு, சிறிதளவு மோர் ஆகியவற்றை எல்லாம் சேர்த்து நன்றாகக் கலந்து, பிசைந்து 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிது எண்ணெய் விட்டு சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு,  கிள்ளிய வற மிளகாய் ஆகியவற்றை எல்லாம் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வாழைத் தண்டை மோர் இல்லாமல் பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர வறுத்த பொருட்களுடன்  முன்பு பிழிந்து வைத்திருந்த வாழைத் தண்டை போட்டு வதக்க வேண்டும். 

சிறிது நேரம் வாழைத் தண்டு வதங்கியதும் அதில் வாழைத்தண்டு வேகத் தேவையான அளவு தண்ணீரை கடாயில் ஊற்றி  சில நிமிடங்கள் வரை மிதமான தீயில் வைத்து நன்றாக வேக விட வேண்டும். இப்போது நன்கு வெந்த உடனே இதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளரி எல்லா பதார்த்தங்களும் நன்கு வெந்த மாத்திரத்தில் கடாயை அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.  இப்போது சுவையான வாழைத்தண்டுக் கறி தயார்.

வாழைத்தண்டின் பயன்கள்:

வாழைத்தண்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி 6 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் பல மருத்துவப் பயன்கள் உள்ளன. வாழைத்தண்டை உணவில் சேர்த்துக்கொள்வதால் பல உடல் நல பிரச்சனைகளைத் தடுக்கலாம். வயிற்றுப் புண்கள், வயிற்றில் சீரற்ற சுரக்கம் அமிலத்தை சீர் செய்ய உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மருந்தாகவும் உணவாகவும் உள்ளது. சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும். நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும். வயிற்றில் நீர்க்கட்டி இருந்தால் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால் நாளடைவில் குணமாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.