சிறு நீரக கோளாரை குணமாக்கும் வாழைத்தண்டு பொரியல் செய்வது எப்படி? பக்கா ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சிறு நீரக கோளாரை குணமாக்கும் வாழைத்தண்டு பொரியல் செய்வது எப்படி? பக்கா ரெசிபி!

சிறு நீரக கோளாரை குணமாக்கும் வாழைத்தண்டு பொரியல் செய்வது எப்படி? பக்கா ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Nov 07, 2024 05:13 PM IST

வாழை மரத்தின் தண்டு பல நன்மைகளை அளிக்கக்கூடிய உணவாக கருதப்படுகிறது. இந்த வாழைத் தண்டினை வைத்து சுவையான பொரியல் செய்யலாம். இந்த பொரியலை சாப்பாட்டிற்கு வைத்தும் சாப்பிடலாம். தனியாகவும் சாப்பிடலாம். இந்த வாழைத் தண்டு பொரியல் செய்வது எப்படி என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சிறு நீரக கோளாரை குணமாக்கும் வாழைத்தண்டு பொரியல் செய்வது எப்படி? பக்கா ரெசிபி!
சிறு நீரக கோளாரை குணமாக்கும் வாழைத்தண்டு பொரியல் செய்வது எப்படி? பக்கா ரெசிபி!

தேவையான பொருட்கள்

1 வாழைத்தண்டு

1 பெரிய வெங்காயம்

3 வற மிளகாய்

சிறிதளவு மஞ்சள் தூள்

அரை கப் தயிர் 

கால் கப் துருவிய தேங்காய்

1 டீஸ்பூன் கடுகு

1 டீஸ்பூன் உளுந்து

தேவையான அளவு உப்பு

2  டீஸ்பூன் எண்ணெய்

செய்முறை 

முதலில் சுத்தமான அழுகாத வாழைத்தண்டை எடுத்துக் கொள்ளவும். இந்த வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் தயிர்,உப்பு,மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும். பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, உளுந்து, வற மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை போட்டு வதக்கி கொள்ளவும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் சிறிதளவு நீரை ஊற்றி கொதிக்க விடவும். 

 பின் இதில் வாழைத்தண்டு சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து கொள்ள வேண்டும்.  இறுதியாக இந்தில் துருவிய தேங்காய் சேர்த்து கிளறவும். நன்றாக வதங்கியதும் அடுப்பை அணைத்து விட வேண்டும். சுவையான மற்றும் சூடான வாழைத்தண்டு பொரியல் ரெடி.

வாழைத்தண்டின் பயன்கள் 

பொதுவாகவே வாழத்தண்டிற்கு சிறுநீரக கோளாறுகளை போக்கும் இயல்புகள் உண்டு. வாழைத்தண்டு சாறை குறிப்பிட்ட கால இடைவெளியில் குடித்து வரை  நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீரும். மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும். அதிக வலியை ஏற்படுத்தும் சிறுநீரக கற்கள் விரைவில் கரைய இந்த வாழைத்தண்டு சாறை குடிக்க வேண்டும். மேலே கூறியவாறு வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறிவிடும்.

காலை எழுந்ததும் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால் அசிடிட்டி போன்ற நெஞ்செரிச்சல் உடனடியாக குணமடையும். இந்த தண்டை சுட்டு வரும் சாம்பலி எண்ணெயில் கலந்து தீக்காயங்களில் பூசலாம். இது விரைவாக புண்ணை ஆற்றும் வல்லமை கொண்டது.  நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில், வைக்க தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒரு போதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.