சிறுநீர் கற்கள் பிரச்சனை உள்ளவர்களுக்கு வாழைத்தண்டு குழம்பு செஞ்சு கொடுங்க! இதோ ஈசியான ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சிறுநீர் கற்கள் பிரச்சனை உள்ளவர்களுக்கு வாழைத்தண்டு குழம்பு செஞ்சு கொடுங்க! இதோ ஈசியான ரெசிபி!

சிறுநீர் கற்கள் பிரச்சனை உள்ளவர்களுக்கு வாழைத்தண்டு குழம்பு செஞ்சு கொடுங்க! இதோ ஈசியான ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Published Feb 26, 2025 11:38 AM IST

வாழைமரத்தின் நுனி முதல் அடி வரை அனைத்தும் உண்பதற்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுகிறது எனக் கூறுவார்கள். இதில் வாழைத் தண்டினை உணவில் சேர்த்துக் கொள்வது சிறுநீரக கற்கள் பிரச்சனைக்கு எதிராக போராட உதவும். அந்த வகையில் இன்று வாழைத்தண்டு குழம்பு செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.

சிறுநீர் கற்கள் பிரச்சனை உள்ளவர்களுக்கு வாழைத்தண்டு குழம்பு செஞ்சு கொடுங்க! இதோ ஈசியான ரெசிபி!
சிறுநீர் கற்கள் பிரச்சனை உள்ளவர்களுக்கு வாழைத்தண்டு குழம்பு செஞ்சு கொடுங்க! இதோ ஈசியான ரெசிபி!

தேவையான பொருட்கள்

ஒரு கப்  நறுக்கிய வாழைத்தண்டு

1 தக்காளி 

4 பெரிய வெங்காயம்

2 பூண்டு பல்

1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

1 டீஸ்பூன் சீரகம்

1 டேபிள்ஸ்பூன் மல்லித் தூள்

கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்

1 கொத்து கறிவேப்பிலை

1 டீஸ்பூன் சீரகத் தூள்

1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த் தூள்

2 வற மிளகாய்

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு உப்பு 

1 கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை

செய்முறை 

முதலில் வாழைத்தண்டிலுள்ள கடினமான தோல் மற்றும் தேவையற்ற நார் பகுதிகளை நீக்கவும். பின்பு அதனை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு அதனுடன் மோர் சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.  அப்போது தான் வாழைத்தண்டு நிறம் மாறாமல் இருக்கும். இப்பொழுது ஒரு மிக்சி ஜாரில் நறுக்கிய தக்காளி, நறுக்கிய வெங்காயம், பூண்டு பல் மற்றும் இஞ்சி விழுது ஆகியவற்றை சேர்த்து மென்மையாக அரைக்கவும்.தேவையான நீர் விட்டு அரைக்கவும்.

பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடக்கவும்.  எண்ணெய் சூடான பின்பு அதில் சீரகம் சேர்த்து வதக்கவும். மேலும் இதில் கறிவேப்பிலை மற்றும் வற மிளகாய் சேர்த்து வதக்கவும். அதோடு நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். அதனுடன் அரைத்த விழுது, உப்பு, சீரகத் தூள், மல்லித் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து கிளறவும். தேவையான அளவு நீர் விட்டு பச்சை வாசம் போகும் வரை ஒரு மூடியால் மூடி வைத்து வேக வைக்கவும். பின்பு ஊற வைத்த வாழைத் தண்டு சேர்த்து சில நிமிடங்கள் வேக வைத்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். இதனை சூடான சாதத்துடன் வைத்து சாப்பிட்டால் சுவை அள்ளும். மேலும் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை தாராளமாக சாப்பிடலாம்.