பேக்கரி ஸ்டைல் பன் பட்டர் ஜாம் சாப்பிட்டு இருக்கீங்களா? முட்டை தேவையில்லை! இதோ உங்க வீட்டிலேயே செய்யலாம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பேக்கரி ஸ்டைல் பன் பட்டர் ஜாம் சாப்பிட்டு இருக்கீங்களா? முட்டை தேவையில்லை! இதோ உங்க வீட்டிலேயே செய்யலாம்!

பேக்கரி ஸ்டைல் பன் பட்டர் ஜாம் சாப்பிட்டு இருக்கீங்களா? முட்டை தேவையில்லை! இதோ உங்க வீட்டிலேயே செய்யலாம்!

Suguna Devi P HT Tamil
Published Oct 09, 2024 11:08 AM IST

நாமே நமது வீடுகளில் பேக்கரி ஸ்டைலில் உணவுகளை செய்து தரும் போதும் மிகவும் சுவையானதாக இருக்கும். எல்லாருக்கும் பிடித்த பன் பட்டர் ஜாமை நாம் வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். இது செய்வதற்கு முட்டை கூடத் தேவை இல்லை.

பேக்கரி ஸ்டைல் பண் பட்டர் ஜாம் சாப்பிட்டு இருக்கீங்களா? முட்டை தேவையில்லை! இதோ உங்க வீட்டிலேயே செய்யலாம்! (madrassamyal)
பேக்கரி ஸ்டைல் பண் பட்டர் ஜாம் சாப்பிட்டு இருக்கீங்களா? முட்டை தேவையில்லை! இதோ உங்க வீட்டிலேயே செய்யலாம்! (madrassamyal)

தேவையான பொருட்கள் 

2 கப் மைதா மாவு 

1 டிஸ்பூன் பேக்கிங் சோடா 

1 டீஸ்பூன் சோடா உப்பு 

200 கிராம் சர்க்கரை 

200 கிராம் வெண்ணெய் 

1 கப் தயிர் 

அரை லிட்டர் பால் 

அரை லிட்டர் எண்ணெய் 

தேவையான அளவு உப்பு 

செய்முறை 

முதலில் மாவு பிசைய ஒரு அகன்ற பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 2 கப் மைதா மாவு, சோடா உப்பு, பேக்கிங் சோடா ஆகியவற்றை பாத்திரத்தில் சேர்த்து கலக்கவும். பின்னர் அதில் சர்க்கரை, வெண்ணெய், தயிர் சேர்த்து கட்டி வராமல் கலந்து வைத்தக் கொள்ள வேண்டும். இப்போது இந்த கலவையில் சிறிது சிறிதாக பால் சேர்த்து பிசைய ஆரம்பிக்க வேண்டும். மிகவும் கவனமாக பால் சேர்க்க வேண்டும். அதிகமாக சேர்த்து விடக் கூடாது. மாவை மென்மையாக பிசைந்து எண்ணெய் தடவி மூடி வைக்க வேண்டும். சுமார் 1 மணி முதல் 2 மணி நேரங்கள் மாவை ஊற விட வேண்டும். அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், அரைத்த சர்க்கரைப் பொடியை சேர்த்து நன்கு கிளற வேண்டும். இதனை சிறிது நேரம் கிளறிய பின்னர் இதில் பாலை ஊற்றி கலக்க வேண்டும். நன்றாக பன் மீது  தடவி சாப்பிடும் பதத்திற்கு இதனை கலக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். 

பன்னில் தடவ தேவையான ஜாமை உருக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஊற வைத்த மாவை எடுத்து உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும். இந்த உருண்டைகளை தட்டையாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாய்யில் பன் பொரிக்கத் தேவையான எண்ணெய் ஊறி அடுப்பில் வைக்க வேண்டும். எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் மாவை போட்டு பொரிக்க வேண்டும். மிதமான சூட்டில் இதனை பொரிக்க வேண்டும். இந்த பன் இரண்டு பக்கமும் வெந்த பின் எடுக்க வேண்டும். பொரித்த பன் ஆறிய பின் அதனை எடுத்து பாதியாக வெட்ட வேண்டும். பின் அதில் முதலில் வெண்ணெய் தடவி பின் ஜாமை தடவி எடுத்துக் கொள்ளவேண்டும். சுவையான பேக்கரி ஸ்டைல் பன் பட்டர் ஜாம் தயார். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். உங்கள் வீட்டிலும் செய்து உங்களது வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து மகிழுங்கள். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.