இனி எல்லாத்துக்கும் ஆந்திரா ஸ்பெஷல் கொத்தமல்லி தொக்கு போதும்! பக்கா ரெசிபி இங்கே!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இனி எல்லாத்துக்கும் ஆந்திரா ஸ்பெஷல் கொத்தமல்லி தொக்கு போதும்! பக்கா ரெசிபி இங்கே!

இனி எல்லாத்துக்கும் ஆந்திரா ஸ்பெஷல் கொத்தமல்லி தொக்கு போதும்! பக்கா ரெசிபி இங்கே!

Suguna Devi P HT Tamil
Published Oct 09, 2024 04:02 PM IST

ஆந்திர மாநிலம் அதன் ஊர்களுக்கும், உணவுகளுக்கும் மிகவும் பிரபலமான மாநிலம் ஆகும். ஆந்திரா என்றாலே அதிக காரம் உடைய உணவுகளை உண்பார்கள் என்ற பெயர் உள்ளது. அதற்கேற்றவாறு அங்கு வைக்கப்படும் சட்னி முதல் குழம்பு வரை அனைத்திலும் அதிகமான காரம் சேர்க்கப்பட்டிருக்கும்.

இனி எல்லாத்துக்கும் ஆந்திரா ஸ்பெஷல் கொத்தமல்லி தொக்கு போதும்! பக்கா ரெசிபி இங்கே(tickling plates)
இனி எல்லாத்துக்கும் ஆந்திரா ஸ்பெஷல் கொத்தமல்லி தொக்கு போதும்! பக்கா ரெசிபி இங்கே(tickling plates)

தேவையான பொருட்கள்

2 கொத்தமல்லி கட்டு

பெரிய  சைஸ் புளி

15 வற மிளகாய்

சிறிதளவு வெல்லம்

சிறிதளவு கடுகு

சிறிதளவு வெந்தயம்

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு உப்பு

செய்முறை

முதலில் கொத்தமல்லியை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கொத்தமல்லியை போட்டு நன்கு வதக்கவும். நன்கு வதங்கிய பின் எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் புளியை சுடு தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 6 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும். எண்ணெய் சுட்ட பின் அதில் காய்ந்த மிளகாயை போட்டு நிறம் மாறும் வரை அதை வதக்கவும். பின் அதில் கடுகை போட்டு கடுகு வெடித்தவுடன், வெந்தயத்தை போட்டு வறுக்கவும். 

நன்கு வறுத்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு கடாயில் இருக்கும் காய்ந்த மிளகாயை மட்டும் எடுத்து வதக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியுடன் சேர்த்து அதை பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும். கடாயில் இருக்கும் கடுகு மற்றும் வெந்தயத்தை எண்ணெய்யின் சூட்டிலேயே சிறிது நேரம் வைத்து பின்பு அதை எடுத்து ஒரு தட்டில் கொட்டி அதை பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும். வதக்கிய அனைத்தும் ஆறியதை உறுதி செய்த பின் அதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி அதனுடன் ஊற வைத்திருக்கும் புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை விட்டு விட்டு நன்கு நைசாக அரைத்து கொள்ளவும். பின்பு அதில் வெல்லத்தை எடுத்து அதை தட்டி போட்டு மீண்டும் நன்கு அரைத்து கொள்ளவும். அதிக காரம் ஒத்துக்கொள்ளாதவர்கள் வெல்லத்தை சேர்க்கலாம்.  பின்னர் அதில் கடாயில் இருக்கும் எண்ணெய்யை ஊற்றி மீண்டும் ஒரு சுற்று சுற்றி கொள்ளவும். சுவையான ஆந்திரா ஸ்பெஷல் கொத்தமல்லி தொக்கு தயார் . பிறகு இந்த கொத்தமல்லி தொக்கை எடுத்து சாதத்திலோ அல்லது தோசைக்கு சைடிஷ் ஆக வைத்தோ அதை சுட சுட பரிமாறவும். இப்பொழுது உங்கள் சூடான மற்றும் அருமையான கொத்தமல்லி தொக்கு தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சாப்பிடுங்கள். மிகவும் சுவையாக இருப்பதால் எந்த உணவையும் அதிகம் சாப்பிட வைக்கும்.