ஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி தொக்கு செய்யத் தெரியுமா? இதோ பக்காவான ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி தொக்கு செய்யத் தெரியுமா? இதோ பக்காவான ரெசிபி!

ஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி தொக்கு செய்யத் தெரியுமா? இதோ பக்காவான ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Jan 05, 2025 02:22 PM IST

சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி என எந்த உணவாக இருந்தாலும் சிறப்பான இணை உணவாக இருப்பது கொத்தமல்லி தொக்கு. ஆந்திர ஸ்டைலில் கொத்தமல்லி தொக்கு செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.

ஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி தொக்கு செய்யத் தெரியுமா? இதோ பக்காவான ரெசிபி!
ஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி தொக்கு செய்யத் தெரியுமா? இதோ பக்காவான ரெசிபி! (Pintrest)

தேவையான பொருட்கள்

2 கொத்தமல்லி தழை 

பெரிய சைஸ் புளி

அரை கப் வற மிளகாய்

சிறிதளவு வெல்லம்

1 டேபிள்ஸ்பூன் கடுகு

1 டேபிள்ஸ்பூன் வெந்தயம்

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு உப்பு

செய்முறை

முதலில் கொத்தமல்லியை நன்கு சுத்தம் செய்து கழுவி ஆய்ந்து அதனை காய வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் சூடு தண்ணீரில் புளியை சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சுட்ட பின் அதில் கொத்தமல்லியை போட்டு கொத்தமல்லி இலை நன்கு சுருளும் வரை அதை வதக்கவும். பிறகு இந்த கொத்தமல்லியை சிறிது நேரம் ஆற விடவும். பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும். எண்ணெய் சுட்ட பின் அதில் வற மிளகாயை போட்டு நிறம் மாறும் வரை அதை வதக்கவும்.

பின்னர் அதில் கடுகை போட்டு கடுகு வெடித்தவுடன் அதில் வெந்தயத்தை போட்டு வறுக்கவும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு கடாயில் இருக்கும் வற மிளகாயை மட்டும் எடுத்து வதக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியுடன் சேர்த்து அதை பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும். கடாயில் இருக்கும் கடுகு மற்றும் வெந்தயத்தை எண்ணெய்யின் சூட்டிலேயே சிறிது நேரம் வைத்து பின்பு அதை எடுத்து ஒரு தட்டில் கொட்டி அதை பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும். நாம் வதக்கிய அனைத்தும் ஆறியதும்   ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு ஊற வைத்திருக்கும் புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு நைசாக அரைத்து கொள்ளவும். பின்பு அதில் வெல்லத்தை  தட்டி போட்டு மீண்டும் நன்கு அரைத்து கொள்ளவும். வெல்லம் விரும்பாதவர்கள் இதை போடாமல் தவிர்த்து விடலாம். பின்னர் அதில் கடாயில் இருக்கும் எண்ணெய்யை ஊற்றி மீண்டும் ஒருமுறை அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு கொத்தமல்லி தொக்கை எடுத்து சாதத்தில் போட்டோ அல்லது தோசைக்கு சைடிஷ் ஆக வைத்தோ அதை சுட சுட பரிமாறவும். இப்பொழுது உங்கள் சூடான மற்றும் அருமையான கொத்தமல்லி தொக்கு தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.