சத்தான மற்றும் சுவையான பாதாம் பிஸ்கட் செய்வது ஈசிதான்! இதோ எளிமையான முறை!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சத்தான மற்றும் சுவையான பாதாம் பிஸ்கட் செய்வது ஈசிதான்! இதோ எளிமையான முறை!

சத்தான மற்றும் சுவையான பாதாம் பிஸ்கட் செய்வது ஈசிதான்! இதோ எளிமையான முறை!

Suguna Devi P HT Tamil
Dec 22, 2024 09:26 PM IST

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த உணவாக பாதாம் இருந்து வருகிறது. இந்த பாதாம் பருப்பை வைத்து பல உணவு வகைகள் செய்யலாம். தினம் தோறும் பாதாமை எடுத்துக் கொள்வதால் உடலில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சத்தான மற்றும் சுவையான பாதாம் பிஸ்கட் செய்வது ஈசிதான்! இதோ எளிமையான முறை!
சத்தான மற்றும் சுவையான பாதாம் பிஸ்கட் செய்வது ஈசிதான்! இதோ எளிமையான முறை! (Pexel)

தேவையான பொருட்கள்

1 கப் மைதா 

அரை டீஸ்பூன் பேக்கிங் பவுடர்

கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா

ஒரு கப் சர்க்கரை

1 முட்டை

1 டீஸ்பூன் பால்

2 டீஸ்பூன் பாதாம் சாறு

6 முதல் 8 பாதாம் பருப்பு 

அரை கப் உருக்கிய வெண்ணெய்

செய்முறை

ஒரு அகன்ற கிண்ணத்தில் மைதா மாவை போட வேண்டும். பின்னர் இதில் பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடாவை சலித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இதில் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும். பின்னர் வேறு ஒரு கிண்ணத்தில், முட்டை, பால் மற்றும் பாதாம் சாறு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் நன்காக கலக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மைதா மாவு கலவையில் வெண்ணெயை உருக்கி சேர்க்க வேண்டும். மேலும் இதில் பால் மற்றும் முட்டை கலவையையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இவை அனைத்தையும் கட்டி இல்லாமல் நன்றாக கலக்க வேண்டும். 

இப்போது அனைத்து பால் கலவையும் ஒரு மென்மையான மாவின் நிலைத்தன்மையை அடையும் வரை நன்கு கலக்கவும். பின்னர் பேக்கிங் ட்ரே ஒன்றை எடுத்து அதில் மாவை ஒரு மேற்பரப்புக்கு மாற்றவும் மற்றும் ஒரு பந்தாக உருட்டி வைத்துக் கொள்ளவும். இதனை சில வினாடிகள் பிசைந்து, ஒட்டிக்கொண்ட பதத்துடன் போர்த்திவிடவும். மேலும் இதனை 15 முதல் 20 நிமிடங்கள் வரை குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். பின்னர் இதனை எடுத்து லேசாக மாவு தடவி மேற்பரப்பில் வைக்கவும். இந்த மாவு உருண்டையிலிருந்து 6 முதல் 8 சிறிய உருண்டைகளை உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.மெதுவாக நடுவில் ஒரு பள்ளத்தை உருவாக்கி சிறிது சமன் செய்யவும். மேலும் இதில் 1 பாதாம் பருப்பை வைக்க வேண்டும், மீதமுள்ளவற்றை மீண்டும் இதே போல செய்ய வேண்டும். அவற்றை ஒரு பேக்கிங் தாளில் ஒரு இடைவெளியில் வைக்க வேண்டும். மேலும் குக்கீகளை 10 முதல் 15 நிமிடங்கள் அல்லது லேசாக பழுப்பு நிறமாக இருக்கும் வரை 400F க்கு முன்கூட்டியே சூடேற்றப்பட்ட  ஓவனில் வைத்து வேக விட வேண்டும். மேலும் இதனை அகற்றி முழுமையாக குளிர்விக்கவும். சுவையான பாதாம் குக்கீஸ் ரெடி. 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.