இத மட்டும் செஞ்சு கொடுங்க! அப்றம் பாருங்க! க்ரில்டு சிக்கன் டாக்கோஸ் செய்யும் முறை இதோ!
ஒரு முக்கிய உணவு வகை தான் சிக்கன் டாக்கோஸ், இது தற்போது ரோட்டுக்கடை முதல் பைவ் ஸ்டார் ஹோட்டல்கள் வரை எல்லா இடத்திலும் விற்கப்படுகிறது. எளிமையான முறையில் வீட்டிலேயே க்ரில்டு சிக்கன் செய்யலாம். அதன் வழிமுறையை இங்கு காணலாம்.
மேலை நாட்டு உணவுகள் எப்போதும் நமது ஊர்களில் தனி இடத்தை பிடித்து வருகின்றன. அதன் வித்தியாசமான சுவையும், மாறுபட்ட சமையல் முறையும் மக்களுக்கு மிகவும் பிடித்தமான முறையில் உள்ளது. மேலும் உள்நாட்டு சமையல் முறையை விட வெளிநாட்டு சமையல் முறை மிகவும் உயர்ந்தது என்ற மனநிலையும் மக்களிடம் நிலவி வருகிறது. அதில் ஒரு முக்கிய உணவு வகை தான் சிக்கன் டாக்கோஸ், இது தற்போது ரோட்டுக்கடை முதல் பைவ் ஸ்டார் ஹோட்டல்கள் வரை எல்லா இடத்திலும் விற்கப்படுகிறது. எளிமையான முறையில் வீட்டிலேயே க்ரில்டு சிக்கன் செய்யலாம். அதன் வழிமுறையை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
கோழியின் மார்பக கறி
அரை கப் கீரை
1 பெரிய தக்காளி
அரை கப் சீஸ்
அரை கப் டகோ சாஸ்
தேவையான அளவு க்ரீம்
எலுமிச்சை துண்டுகள்
தேவையான அளவு டார்ட்டிலாஸ்
அரை கப் புதினா இலைகள்
அரை கப் கொத்தமல்லி இலைகள்
2 டீஸ்பூன் எண்ணெய்
மசாலா ரப் செய்வதற்கு
1 டீஸ்பூன் மிளகு தூள்
அரை டீஸ்பூன் வெங்காய தூள்
கால் டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
கால் டீஸ்பூன் பூண்டு தூள்
கால் தேக்கரண்டி கல் உப்பு
கால் டீஸ்பூன் உலர்ந்த ஆர்கனோ
செய்முறை
முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் தடவ வேண்டிய மசாலா பொருட்களான மிளகு தூள், வெங்காய தூள், சிவப்பு மிளகாய் தூள், பூண்டு தூள், உலர் ஆர்கனோ மற்றும் கல் உப்பை போட்டு கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் கோழி மார்பு கறியை எடுத்து அதில் மசாலா பொருட்களை எடுத்து முழுவதும் தேய்க்கவும். கறி முழுவதும் நன்றாக படுமாறு மசாலா தேய்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக சூடானதும், அதில் மசாலா தடவிய கோழி மார்பு கறியை எடுத்து அந்த எண்ணெயில் போட்டு வேக விட வேண்டும். கறியின் அனைத்து பக்கமும் நன்றாக வெந்த பின்பு எடுக்க வேண்டும்.
இதனை அடுத்து மைக்ரோ ஓவனை 200C/400F க்கு ப்ரீஹீட் செய்து எண்ணெயில் பொரித்து எடுத்த கோழி கறியை போட்டு வேக விட வேண்டும். கறி எல்லா பக்கமும் வெந்த பின்னர் தனியாக எடுத்து வைக்க வேண்டும். கறி நன்றாக ஆறியதும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு தட்டையான மேற்பரப்பில் ஒரு டார்ட்டில்லாவை வைக்கவும். அதில் டகோ சாஸைப் பரப்பி, கீரையை மேலே தெளிக்கவும். வெட்டப்பட்ட கோழி மார்பகங்கள், தக்காளி, சீஸ் மற்றும் புளிப்பு கிரீம் மேலே வைக்கவும். புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும். இதன் மேலே எலுமிச்சை துண்டுகளை சின்னதாக வெட்டி வைத்து இதன் மேலே வைக்க வேண்டும். சுவையான க்ரில்டு சிக்கன் டாக்கோஸ் தயார். இதனை நீங்களும் உங்களது வீட்டில் இந்த சுவையான உணவை செய்து கொடுத்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள்.
டாபிக்ஸ்