லஞ்ச் பாக்ஸ்க்கு இது தான் பெஸ்ட் சாய்ஸ்! கோவக்காய் சாதம் செய்வது எப்படி! ஈசி ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  லஞ்ச் பாக்ஸ்க்கு இது தான் பெஸ்ட் சாய்ஸ்! கோவக்காய் சாதம் செய்வது எப்படி! ஈசி ரெசிபி!

லஞ்ச் பாக்ஸ்க்கு இது தான் பெஸ்ட் சாய்ஸ்! கோவக்காய் சாதம் செய்வது எப்படி! ஈசி ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Nov 20, 2024 10:39 AM IST

கோவாக்காயை வைத்து வித்தியாசமான முறையில் லஞ்ச் பாக்ஸ்க்கு சுவையான சாதம் செய்யலாம். இது வித்தியாசமாகவும், புது வித சுவையுடனும் இருக்கும். இந்த கோவாக்காயை வைத்து கோவாக்காய் சாதம் செய்யும் முறையை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

லஞ்ச் பாக்ஸ்க்கு இது தான் பெஸ்ட் சாய்ஸ்! கோவக்காய் சாதம் செய்வது எப்படி! ஈசி ரெசிபி!
லஞ்ச் பாக்ஸ்க்கு இது தான் பெஸ்ட் சாய்ஸ்! கோவக்காய் சாதம் செய்வது எப்படி! ஈசி ரெசிபி! (Youtube)

தேவையான பொருட்கள்

ஒரு கப் பாசுமதி அரிசி 

அரை கிலோ கோவாக்காய் 

2 பெரிய வெங்காயம் 

இஞ்சி பூண்டு விழுது 

4 டீஸபூன் நெய் 

2 டீஸ்பூன் சீரகம் 

1 டீஸ்பூன் மல்லி 

10 பல் பூண்டு 

1 டீஸ்பூன் மஞ்சள்தூள்

2 டீஸ்பூன் மிளகாய்தூள்

2 டீஸ்பூன் தண்ணீர் 

3 டீஸ்பூன்  எண்ணெய்

1 டீஸ்பூன் கடலை பருப்பு 

1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு

1 டீஸ்பூன் கடுகு

1 டீஸ்பூன் சீரகம்

2 வற மிளகாய் 

அரை டீஸ்பூன் பெருங்காய தூள் 

சிறிதளவு கறிவேப்பிலை

நறுக்கிய கொத்தமல்லி

செய்முறை

முதலில் கோவாக்காய் சாதம் செய்வதற்கு பாசுமதி அரிசியை ஊற வைத்து எடுத்து ஒரு பாத்திரம் அல்லது குக்கரில் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சாதம் வேக வைக்கும் போது எண்ணெய் ஊற்றினால் நன்கு உதிரியாக சாதம் வரும். பின்னர் ஒரு மிக்சி ஜாரை எடுத்துக் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தேவையான அளவு உப்பு, சிறிதளவு மல்லி விதைகள், சிறிதளவு சீரகம், மிளகாய் தூள் மற்றும் புளி துண்டை போடவும். இவை அனைத்தையும் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.  பின்னர் ஒரு கடாயை அஅடுப்பில் வைத்து மிதமான சூட்டில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் நன்கு சூடானதும் அதில் கோவாக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் போட்டு வறுக்க வேண்டும். இதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.  இப்பொழுது அதே கடாயில் மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடான பின்னர் அதில் கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இவை நன்கு வறுபட்டதும் அதில் வற மிளகாயை நன்கு வெட்டி செற்றத்துக் கொள்ள வேண்டும். மேலும் இதில் பெருங்காய தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

பின்னர் இதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி விட வேண்டும். முதலில் நாம் அரைத்த மசாலா கலவையை இதில்  சேர்த்து நன்கு கலக்கவும். மசாலா வெந்து பச்சை வாசனை போனதும், தனியாக வதக்கி வைத்துள்ள கோவக்காய் துண்டுகளை சேர்த்து மசாலாவுடன் கலக்கி விட வேண்டும். பின்னர் தேவவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு வேகவைத்த பாசுமதி அரிசியை சேர்த்து கலக்கவும். நெய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்க்கவும். சூடாகவும் நன்றாகவும் பரிமாற சுவையான கோவக்காய் சாதம் தயாராக உள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.