தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  How To Overcome Shyness In Children?

Kids Health: பிள்ளைகளின் கூச்ச சுபாவத்தைப் போக்குவது எப்படி?

I Jayachandran HT Tamil
Jan 28, 2023 11:40 PM IST

பிள்ளைகளின் கூச்ச சுபாவத்தைப் போக்குவது எப்படி என்பது குறித்து இங்கு காணலாம்.

பிள்ளைகளின் கூச்ச சுபாவம்
பிள்ளைகளின் கூச்ச சுபாவம்

ட்ரெண்டிங் செய்திகள்

குழந்தைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருங்கள்-

பெற்றோர்கள் மற்றும் மற்றவர்களின் நடத்தைகளைக் கவனிப்பதன் மூலம் குழந்தைகள் நிறைய கற்றுக்கொள்கிறார்கள். தங்கள் பிள்ளைகள் தைரியமாக வெளிவுலகில் பழக வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்கள், குழந்தைகள் முன்பு தாங்களும் தாரளமாக வெளியுலகத் தொடர்புகளை வைத்திருக்க வேண்டும். அதைப் பார்த்து அவர்களும் கற்றுக் கொள்வார்கள்.

வெளிப்பழக்கத்தை ஊக்குவியுங்கள்-

வெளியாட்களுடன் சகஜமாகப் பழகுவதற்கு சொல்லிக் கொடுங்கள். அதேசமயத்தில் வெளியாட்களுடன் எப்படிப்பட்ட அளவுக்கு பழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் புரிய வையுங்கள்.

சமூக சூழ்நிலைகளை அனுபவிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் குழந்தைக்கு சமூக திறன்களை வளர்க்க உதவுங்கள். பிள்ளைகள் தங்களது நண்பர்களை வீட்டுக்கு அழைப்பதையோ அல்லது நண்பர்களின் வீட்டுக்குச் செல்வதையோ ஊக்குவிக்க வேண்டும்.

எந்த சமயத்திலும் பிள்ளைகளை ஒரு அச்சுறுத்தும் சூழ்நிலையில் தள்ள வேண்டாம். இதனால் மனதளவில் பிள்ளைகள் பின்தங்கி விடுவார்கள். குழந்தைகள் பாதுகாப்பாக உணர உதவுங்கள். சமூக சூழ்நிலைகளில் பங்கேற்க உதவும் சுவாரஸ்யமான பொருட்களை வழங்குங்கள்.

உங்கள் குழந்தைக்கு வசதியாக இருக்க நேரம் கொடுங்கள். அவர்கள் விருப்பம் போல் நடக்க வாய்ப்புகளை வழங்குங்கள்.

விளையாட்டுக் குழுக்கள் அல்லது பெற்றோர் குழுக்கள் போன்ற சமூக சூழ்நிலைகளில் உங்கள் குழந்தைகளைப் பழக்கப்படுத்துங்கள். இதன்மூலம் குழந்தைகளின் தன்னார்வம் பெருகும்.

உங்கள் பிள்ளையின் உணர்வுகள் சரியாக இருப்பதையும், அவர்களின் உணர்வுகளை நிர்வகிக்க நீங்கள் அவர்களுக்கு உதவுவீர்கள் என்பதையும் அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

உங்கள் குழந்தைக்கு அதிக செல்லம் கொடுக்க வேண்டாம். இதனால் அவர்கள் அதிகளவில் உங்களைச் சார்ந்து செயல்படத் தொடங்குவார்கள்.

மேற்கொண்ட வழிமுறைகளைப் பின்பற்றி வந்தாலே உங்கள் பிள்ளைகளின் கூச்ச சுபாவம் மறைந்து விடும்.

WhatsApp channel

டாபிக்ஸ்