White Khushka Rice: கம கமன்னு பாய் வீட்டு ஸ்டைலில் குஸ்கா செய்வது எப்படி - உள்ளே வாங்க எளிமையா கத்துக்கலாம்!
White Khushka Rice: கம கமன்னு பாய் வீட்டு ஸ்டைலில் குஸ்கா செய்வது எப்படி என்பது குறித்துப் பார்ப்போம். மேலும், அதனை எப்படி கற்றுக்கொள்ளலாம் என்பது குறித்துப் பார்ப்போம்.
White Khushka Rice: விடுமுறைநாளையொட்டி எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யும்படியான பாய் வீட்டு குஸ்காவை செய்வது எப்படி என்பது குறித்துக் காண்போம்.
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
நெய் - 1 டீஸ்பூன்,
பிரியாணி இலை - 2,
பட்டை, கிராம்பு - சிறிதளவு,
ஏலக்காய் - சிறிதளவு,
பல்லாரி வெங்காயம் - 3,
பச்சை மிளகாய் - 2 ;
ஒரு கைப்பிடி அளவு - புதினா, கொத்தமல்லி,
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்,
முந்திரிப்பருப்பு - 20 எண்ணிக்கை,
தயிர் - 4 டீஸ்பூன்,
கரம் மசாலா - 1 டீஸ்பூன்,
தக்காளி - 2,
உப்பு - ஒன்றை டீஸ்பூன் அளவு,
அரிசி - 5 கப்,
தண்ணீர் - 7.5 கப்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் நெய் 1 டீஸ்பூன் சேர்த்து சூடுபடுத்திக்கொள்ளவும். அதில் பிரியாணி இலை இரண்டு, பட்டை கிராம்பு சிறிதளவு, ஏலக்காய் சிறிதளவு சேர்த்துக்கொள்ளவும். அதேபோல், அதில் நன்கு நறுக்கிய மூன்று பல்லாரி வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் சேர்த்துக்கொள்ளவும். பின் அதனை நன்கு வதக்கிக்கொள்ளவும்.
இதனையடுத்து அதன் மேல் ஒரு கைப்பிடி அளவு புதினா, கொத்தமல்லி இலைகளைப் போட்டு நன்கு வதக்கிக்கொள்ளவும். பின் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை அதில் போட்டுக்கொள்ளவும். பின் பாத்திரத்தில் இஞ்சி பூண்டு பேஸ்ட் பிடிக்காமல் இருக்க நீர் சேர்த்துக் கொள்ளவும். வெப்பத்தின் அளவை குறைத்துக் கொள்ளவும். அதன்பின், 20 முந்திரிப் பருப்பை சேர்த்துக் கொள்ளவும். அதனைத் தொடர்ந்து 4 டீஸ்பூன் தயிரை சேர்த்துக்கொண்டு கிளறிக்கொள்ளவும். ஒரு டீஸ்பூன் அளவு கரம் மசாலா சேர்த்துக்கொள்ளவும். அதுதனி மணத்தைத் தரும். அதன்பின் நறுக்கிய தக்காளி இரண்டை, அந்த கலவையின் மேல் போடவும்.
அதன்பின் ஒன்றரை டீஸ்பூன் உப்பினை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். இதனைத் தொடர்ந்து 20 நிமிடங்கள் நீரில் ஊறவைத்த 5 கப் அரிசியை அதில் சேர்க்கவும். பின், 7.5 கப் நீர் ஊற்றிக் கொள்ளவும். இந்த கலவைகள் அனைத்தையும் சேர்த்தபின், உப்பினை மட்டும் சரியாக உள்ளதா எனப் பரிசோதித்துக் கொள்ளவும். பின் நீர் வற்றியபிறகு, புதினா கொத்தமல்லியை அதன் மேல் சிறிது தூவிவிடவும். மிதமான சூட்டில் வைத்துக்கொண்டு, ஒரு தட்டினை வைத்து மூடி, அந்த தட்டின்மேல் ஒரு எடையை வைத்து (தம்மில் இருப்பதற்காக) விடவும். அதனைத் தொடர்ந்து 15 நிமிடங்கள் கழித்து குஸ்கா தயார் ஆகிவிடும். தற்போது முஸ்லீம் பாய் வீட்டு ஸ்டைலில் கமகமக்கும் வெள்ளை குஸ்கா தயார்.
வெங்காயத்தின் நன்மைகள்:
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை: வெங்காயத்தில் குர்செடின் மற்றும் சல்பர் கலவைகள் போன்றவை உள்ளன. வயது தொடர்பான கண் நிலைகளிலிருந்து கண்களைப் பாதுகாக்க உதவும்.
அழற்சி எதிர்ப்பு பண்புகள்: வெங்காயம் கண் அழற்சி மற்றும் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு பயனளிக்கும்.
கிளௌகோமாவுக்கான சாத்தியம்: சில ஆய்வுகள் வெங்காயம் உள்விழி அழுத்தத்தைக் குறைக்க உதவக்கூடும் என்று கூறுகின்றன. இது கிளௌகோமா உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும்.
நோயெதிர்ப்பு ஆதரவு: வெங்காயம் வைட்டமின் சி-யின் நல்ல மூலமாகும். இது ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்திற்கும் கண் ஆரோக்கியத்திற்கும் மறைமுகமாக பயனளிக்கிறது.
நச்சுத்தன்மை: வெங்காயத்தில் உள்ள அல்லிசின் போன்ற கலவைகள் நச்சுத்தன்மையை வெளியேற்றுகிறது.
டாபிக்ஸ்