Pan Cake: கோதுமை மாவில் சுவையான பான் கேக்! அசத்தலா செஞ்சு சாப்பிடலாம்! சூப்பாரான ரெசிபி உள்ளே!
Pan Cake: பான் கேக் என்பது உலகளாவிய அளவில் சிறந்த காலை உணவாக கருதப்படும் ஒரு உணவாகும் இதில் பழங்களையும் சேர்த்து சாப்பிடுவது உண்டு மேலும் இது இனிப்பாக இருப்பதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்

காலை எழுந்ததும் நாம் சாப்பிடும் உணவே அந்த நாளின் தொடக்க புள்ளியாகும். காலை உணவு சரிவர இல்லாததால் பலருக்கு உடல் ஆரோக்கியம் கெட்டுப் போகும். இந்த நிலையில் காலை உணவை சரிசமமான அளவில் எடுத்துக் கொள்ள உணவுகள் நிபுணர்களும் பரிந்துரை செய்கின்றனர். ஆனால் நமது வீடுகளில் இட்லி தோசை பொங்கல் என வழக்கமான உணவுகளையே தருகின்றனர். இதனால் நமது வீட்டில் உள்ளவர்களுக்கு சலிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. இருப்பினும் இந்த வழக்கமான உணவுகளில் இருந்து வெளியேற ஒரு தீர்வு உள்ளடக்கு. உங்களது காலை உணவுகள் போர் அடித்து விட்டதா? இதோ உங்களுக்காக சுவையான மற்றும் இனிப்பான ஒரு காலை உணவை தருகிறோம். பான் கேக் என்பது உலகளாவிய அளவில் சிறந்த காலை உணவாக கருதப்படும் ஒரு உணவாகும் இதில் பழங்களையும் சேர்த்து சாப்பிடுவது உண்டு. மேலும் இது இனிப்பாக இருப்பதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். சிறந்த முறையாகும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பத்தோடு இந்த காலை உணவை சாப்பிட்டு விட்டு செல்வார்கள். கோதுமை மாவு மற்றும் வெள்ளத்தை வைத்து ருசியான பான்கேக் செய்வது எப்படி என்பதை இங்கு காணலாம்.
வெல்லம்
இன்று பலரும் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக பனை வெள்ளத்திற்கு மாறி உள்ளனர். வெள்ளை சர்க்கரை உடலுக்கு சர்க்கரை நோய், செரிமான கோளாறுகள் போன்ற பல தீங்குகள் விளைவிக்கும். அதனால் வெள்ளை சர்க்கரை பயன்படுத்தும் இடத்தில் பனை வெல்லம் சேர்க்கலாம். டீ, காபி, கேக், இனிப்பு வகைகள் ஆகியவற்றிற்கு பனை வெல்லம் பயன்படுத்துவது உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். உடல் சூடு, செரிமான கோளாறுகளை சரி செய்யும். இத்தனை நன்மை பயக்கும் பனை வெல்லத்தை பயன் படுத்தி அனைவரும் விரும்பும் வகையில் இனிப்பாக சூடாக பான் கேக் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
1 கப் கோதுமை மாவு
அரை கப் வெல்லம்
1 கப்தண்ணீர்
அரை ஸ்பூன்ஏலக்காய்
1 சிட்டிகை பேக்கிங் சோடா
தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
முதலில் ஒரு அடி கனமான பாத்திரத்தில் பனை வெல்லத்தை தண்ணீர் சேர்த்து வெல்லம் கரையும் வரை சூடு செய்ய வேண்டும். பின்னர் அவற்றை சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும். இப்பொழுது மற்றொரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ஏலக்காய் பொடி மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் வெல்லம் தண்ணீர் ஆறியவுடன் கோதுமை மாவுடன் சேர்த்து அரிசி மாவு பதத்திற்கு கலக்க வேண்டும்.
அடுத்து அடுப்பில் தோசை கல்லை சுட வைக்க வேண்டும். கல் சூடானதும் அதில் மாவை ஊற்றி சுற்றி விட வேண்டும். பின்னர இதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். ஒரு புறம் வெந்தவுடன் திருப்பி போட்டு மறுபக்கமும் வேக வைத்து எடுத்தால் சுவையான கோதுமை வெல்லம் பான் கேக் ரெடி. இந்த பான் கேக் சத்தான மற்றும் சுவையான காலை உணவிற்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

டாபிக்ஸ்