Healthy Diet: ஆரோக்கியமான வெந்தய குழம்பு செய்வது எப்படி?
வெந்தய குழம்பு செய்வது எப்படி என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
அற்புதமான மருத்துவக் குணங்களைக் கொண்ட உணவுப் பொருட்களில் வெந்தயமும் ஒன்று. அதில் 26 வகையான மருத்துவ குணங்கள் இருப்பது குறித்து நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம்.
வெந்தயத்தை வைத்து குழம்பு செய்வது எப்படி என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
வெந்தயக் குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்-
வெந்தயம் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம்-2
எண்ணெய்-தேவையான அளவு
கடுகு-¼ ஸ்பூன்
கருவேப்பிலை-சிறிதளவு
கொத்துமல்லி-1 ஸ்பூன்
சீரகம் -1 ஸ்பூன்
மிளகாய்-3
மஞ்சள் பொடி-1ஸ்பூன்
புளி கரைசல்- சிறிது
வெந்தய குழம்பு செய்முறை
வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, வழக்கம் போல பாத்திரத்தில் எண்ணெய், கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதே நேரத்தில், மல்லி, சீரகம், மிளகாய், மஞ்சள் பொடி, புளி கரைசல் ஆகியவற்றை நன்கு அரைத்து பாத்திரத்தில் வெந்து கொண்டிருக்கும் வெங்காயத்துடன் சேர்க்கவும்.
பின்பு வெந்தயத்தை ஒரு பாத்திரத்தில் நன்கு வறுத்து, அது சிவந்ததும் இறக்கி வைத்துக்கொள்ளவும்.
குழம்பு நன்கு கொதித்தவுடன் வறுத்த வெந்தயத்தை அதில் சேர்க்கவும். வெந்தய குழம்பு தயார்.
வெந்தய தயாரிப்புகளுக்காக மெனக்கட நேரமில்லாதவர்கள், வாரத்தில் ஒருமுறையாவது இந்தக் குழம்பை முயற்சிக்கலாம்.
வெந்தயம் ஆரோக்கியமான உணவுதான் என்றாலும், தினசரி மாத்திரை சாப்பிடும் நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் அதிகம் சாப்பிடக்கூடாது. ஏனென்றால், அவர்களுக்கு இது தரும் பக்க விளைவுகள் மோசமானதாக இருக்கும். சாப்பிடும் மாத்திரை பலனளிக்காது. குழந்தைகளுக்கு வெந்தயமே செரிக்காது.
கர்ப்பிணிப் பெண்களுக்குக் கர்ப்பப்பையில் சில பிரச்னைகள் ஏற்படும். மற்றபடி சாதாரணமாக அனைவரும் எடுத்துக்கொள்ளக்கூடிய உணவுதான் இது.