Thinai Arisi Biryani: மகப்பேறில் முக்கியப்பங்கு வகிக்கும் தினை அரிசி.. இதனைக் கொண்டு காய்கறி பிரியாணி செய்வது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Thinai Arisi Biryani: மகப்பேறில் முக்கியப்பங்கு வகிக்கும் தினை அரிசி.. இதனைக் கொண்டு காய்கறி பிரியாணி செய்வது எப்படி?

Thinai Arisi Biryani: மகப்பேறில் முக்கியப்பங்கு வகிக்கும் தினை அரிசி.. இதனைக் கொண்டு காய்கறி பிரியாணி செய்வது எப்படி?

Marimuthu M HT Tamil Published Jan 23, 2025 03:07 PM IST
Marimuthu M HT Tamil
Published Jan 23, 2025 03:07 PM IST

மகப்பேறில் முக்கியப்பங்கு வகிக்கும் தினை அரிசி.. இதனைக் கொண்டு காய்கறி பிரியாணி செய்வது எப்படி என்பது குறித்துப் பார்ப்போம்.

மகப்பேறில் முக்கியப்பங்கு வகிக்கும் தினை அரிசி.. இதனைக் கொண்டு காய்கறி பிரியாணி செய்வது எப்படி?
மகப்பேறில் முக்கியப்பங்கு வகிக்கும் தினை அரிசி.. இதனைக் கொண்டு காய்கறி பிரியாணி செய்வது எப்படி?

தினை அரிசி காய்கறி பிரியாணி செய்யத்தேவையான பொருட்கள்:

  • தினை அரிசி - ஒரு டம்ளர்;
  • எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்;
  • சோம்பு - அரை டீஸ்பூன்;
  • லவங்கம், பட்டை, ஏலக்காய் - சிறிதளவு;
  • பச்சை மிளகாய் - 4;
  • வெங்காயம் - நடுத்தர அளவு - 2 நறுக்கியது;
  • உப்பு - சிறிதளவு;
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு டீஸ்பூன்;
  • தக்காளி - இரண்டு நறுக்கியது;
  • பச்சை பட்டாணி - 50 கிராம் - (7 மணி நேரம் ஊறவைத்தது)
  • பீன்ஸ் - 6;
  • கேரட் - 2 ;
  • குடை மிளகாய் - 2;
  • புதினா - ஒரு பிடி;

தினை அரிசி காய்கறி பிரியாணி செய்முறை:

  • முதலில் ஒரு டம்ளர் தினை அரிசியை எடுத்துக்கொண்டு, இரண்டு தடவை நீர் ஊற்றி அலசிக்கொள்ளவும்.
  • ஒரு அடுப்பில் குக்கரை வைத்து சுடவைத்துவிட்டு, இரண்டு டேபிள் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் அரை டீஸ்பூன் சோம்பு சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் மூன்று லவங்கம் சேர்க்கவும். பட்டை ஒரு துண்டு சேர்த்துக்கொள்ளவும்.
  • அதன்பின் அதனுடன் இரண்டு ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை சேர்த்துக்கொள்ளலாம். மேலும், அதன் மேல் 4 பச்சை மிளகாய் மற்றும் இரண்டு நடுத்தர அளவு வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம்.
  • வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிவிட்டதும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டிக்கொள்ளவும். பின்பு வெங்காயத்தினை பொன்னிறமாகும் வரை வதக்கிக்கொள்ளவும்.
  • அடுத்து இரண்டு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக்கொள்ளவும். இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம்போனபின், அதன்மேல் தக்காளியை சேர்த்துக்கொள்ளலாம்.
  • அதன்பின் மஞ்சள் பொடி ஒரு டீஸ்பூன், கரம் மசாலா அரை டீஸ்பூன், முக்கால் டீஸ்பூன் தனி மிளகாய்ப்பொடி சேர்த்துக்கொள்ளலாம். பின் சுவைக்கேற்ப கூடுதல் மற்றும் குறையாக மசாலாவை சேர்த்துக்கொள்ளலாம். பின் மசாலாவை கலந்துவிடவும்.

பிரியாணி காய்கறிகளை இப்படி சேர்க்கவும்:

  • இந்த மசாலா மீது 7 மணி நேரம் ஊறவைத்த 50 கிராம் பச்சைப் பட்டாணியை கலந்துவிடவும். அதன்பின், கேரட், பீன்ஸ், குடை மிளகாயைச் சேர்க்கவும். புதினா ஒரு பிடியைப் போட்டுவிடவும்.
  • அடுத்து தினை அரிசி அளந்து வைத்த டம்ளரில் இரண்டரை டம்ளர் நீர் ஊற்றவும். ஒரு டம்ளர் தினை அரிசிக்கு இரண்டரை டம்ளர் நீர் ஊற்றினால் தான் நன்கு வெந்து வரும்.
  • அதன்பின் நாம் நீர் ஊற்றி சுத்தம் செய்து வைத்திருக்கும் தினை அரிசியை, அந்த மசாலாவில் சேர்த்துக்கொள்ளலாம்.
  • நன்கு கலந்தபின், உப்பு தேவைப்பட்டால், அந்தக் கலவையில் போடலாம்.
  • இரண்டு விசில் குக்கரில் வரும் வரை அடுப்பில் வைக்கவும். அதன்பின், வாயு வெளியேறியதும் குக்கரை திறக்கலாம். இதன்மூலம் தினை அரிசி காய்கறி பிரியாணி சுவையாக ரெடி. அதன்மேல் புதினா இலைகளை சேர்த்துக்கொண்டு கிளறலாம்.

தினை அரிசியின் நன்மைகள்:

  • தினையில் இரும்பு மற்றும் கால்சியம் கலந்து இருப்பதால், ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே இருக்கும் மலட்டுத்தன்மையை நீக்குகிறது. விந்தணுவில் இருக்கும் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
  • நரம்புத்தளர்ச்சி குறைபாட்டை நீக்குகிறது.
  • ரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது.