'நறுக்கு கொறுக்குன்னு தட்டை சாப்பிடலாமா?’ மாலை நேர ஸ்நாக்ஸாக தட்டை செய்யும் எளிய வழிமுறைகள்!
கோதுமை மாவு, ரவை, மைதா மாவு ஆகியவற்றால் தயாரிக்கப்படும் இந்த சிற்றுண்டிகள் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். தயாரிக்க குறைந்த நேரம், குறைவான பொருட்கள் தேவை. சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும்.

வேலையில் ஒரு பரபரப்பான நாளுக்குப் பிறகு, மாலையில் ஒரு கப் தேநீர்/காபி குடிப்பது மிகவும் நிம்மதியாக இருக்கும். உங்கள் தேநீருடன் ஒரு சுவையான சிற்றுண்டி இருந்தால் அது இன்னும் அந்த தருணத்தை மகிழ்ச்சியாக இருக்கும். மாலை நேர சிற்றுண்டி என்றதும், நமக்கு உடனடியாக சமோசாக்கள், பஃப்ஸ், பிஸ்கட் மற்றும் பிற சிற்றுண்டிகள் தான் நினைவுக்கு வருகின்றன. ஆனால், இதைத் தவிர, தேநீர்/காபியுடன் சாப்பிட ஏராளமான சிற்றுண்டிகள் உள்ளன. அதில் மாத்ரி என்னும் பிரபலமான குஜராத் சிற்றுண்டியும் ஒன்று.
இது ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப், தமிழ்நாட்டிலும் தயாரிக்கப்படுகிறது. இதனை தமிழ்நாட்டில் தட்டை என்கின்றனர்.
கோதுமை மாவு, ரவை, மைதா மாவு ஆகிய மூன்றையும் கலந்து தயாரிக்கப்படும் இந்த சிற்றுண்டிகள் சாப்பிட மிகவும் நொறுக்குத் தன்மையானவை. அலாதி சுவையாக இருக்கும். தயாரிக்க குறைந்த நேரம், குறைவான பொருட்கள் இருந்தாலே போதும் என்ற நிலையில் தான், இந்த தட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த தட்டைகள் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். இந்த தட்டையை எப்படி செய்யலாம் என்பதை இதுவரை முயற்சிக்காதவர்கள் கூட, எளிமையாக நாங்கள் தரும் சில வழிமுறைகளைப் பயன்படுத்தி, இந்த தட்டையினை முயற்சி செய்து பார்க்கலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.