Vatha Kulambu Recipe: அக்கம் பக்கம் எல்லாம் கம கமக்கும் வத்தக் குழம்பு செய்யத் தெரியுமா? அசத்தலான ரெசிபி!
Vatha Kulambu Recipe:தமிழ்நாட்டில் பல வகையான உணவு முறைகள் உள்ளன. பாரம்பரிய உணவுகளும், சுவையான உணவுகளும் சாப்பிடுவோர் மனதை முழுதாக ஆட்கொள்ளுகிறது. இந்த வரிசையில் வத்தல் குழம்பு மிகவும் ருசியான ஒன்றாகும்.
பகைவர் ஆனாலும் வீடு தேடி வந்தால் வரவேற்கும் விருந்தோம்பல் நமது தமிழ் நாட்டு மக்களிடம் உள்ளது. விருந்தோம்பலில் முக்கியமானது பாரம்பரிய உணவுகளை பரிமாறி விருந்தினார்களின் மனதை மகிழ்ச்சி அடைய செய்வதாகும். தமிழநாட்டில் பல வகையான உணவு முறைகள் உள்ளன. பாரம்பரிய உணவுகளும், சுவையான உணவுகளும் சாப்பிடுவோர் மனதை முழுதாக ஆட்கொள்ளுகிறது. இந்த வரிசையில் வத்தல் குழம்பு மிகவும் ருசியான ஒன்றாகும். இந்த வத்தல் குழம்பு செய்யும் எளிமையான முறையை பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
ஒரு கைப்பிடி அளவு புளி, 10 சின்ன வெங்கயம், 10பூண்டு, ஒரு கைப்பிடி அளவு சுண்டைக்காய் வத்தல், மணத்தக்காளி வத்தல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய், சிறிதளவு மஞ்சள் பொடி, கடுகு, உளுந்தம் பருப்பு ஆகியவையும் எடுக்க வேண்டும். மசாலா அரைக்க தேவையான 5 காய்ந்த மிளகாய், 2 டேபிள் ஸ்பூன் மல்லி, 1 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு, மிளகு 1 டேபிள் ஸ்பூன், சீரகம் 1 டீ ஸ்பூன், 1 கொத்து கறிவேப்பிலை, சிறிதளவு வெந்தயம் போன்றவற்றையும் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். உப்பு தேவையான அளவு வேண்டும்.
செய்முறை
ஒரு கடாயில் சிறிது அளவு எண்ணெய் விட்டு மசாலா அரைக்கத் தேவையான பொருட்களான மல்லி, துவரம் பருப்பு, மிளகு, கரிவிப்பிழை, சீரகம், காய்ந்த மிளகாய், வெந்தய என அனைத்தையும் பொன்னிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும். பின்னர் வறுத்த பொருட்களில் உள்ள சூடு குறையும் வரை ஆற வைக்க வேண்டும். இந்த வறுத்த பொருட்கள்ஆறிய பின்னர் 4 சின்ன வெங்காயத்தை அதில் சேர்த்து மிக்சி அல்லது அம்மியில் வைத்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மீண்டும் கடாயில் 1 டேபிள் ஸ்பூன் அளவுள்ள எண்ணெயை விட்டு சூடான பிறகு சுண்டைக்காய் வத்தல், மணத்தக்காளி வத்தல் ஆகியவற்றை தனித் தனியாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதை எண்ணெயில் மீதமுள்ள பொருட்களான கடுகு, உளுந்தை போட்டு தாளிக்கவும். பின்னர் அதில் சின்ன வெங்காயாம் நான்கை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதில் ஊறவைத்த புளி, தேவையான அளவு உப்பை சேர்த்து வடிகட்டவும்.
இறுதியாக..
வடிகட்டிய பின் அதனை வதங்கிய பூண்டு,வெங்காயத்துடன் சேர்த்து விடவும். இறுதியாக மஞ்சள் பொடி சேர்க்கவும். மேலும் இதனுடன் அரைத்த விழுது சேர்க்கவும். கொதிக்கும் போது வறுத்து வைத்த வத்தல் வகைகளை சேர்க்க வேண்டும். குழம்பு நன்றாக கொதிக்கும் பொழுது 2டேபிள் ஸ்பூன் நல்ல எண்ணெய் விட்டு,நன்கு வற்றிய பின்னர் இறக்கி சாப்பிடலாம்.
சூடாக சாப்பிடும் பொது மிகவும் நன்றாக இருக்கும். சூடான சாதம், இட்லி, சப்பாதி, தோசை என பல வித உணவுகளோடு வைத்து சாப்பிடலாம். இந்த வத்தல் குழம்பை 3 நாட்களக்கு மேல் வைத்து சாப்பிடலாம். புளி சேர்த்து இருப்பதால் கெடாமல் இருக்கும். இந்த குழம்பு திருச்சியை ஒட்டியுள்ள சில ஊர்களில் மிகவும் பிரபலமான ஒரு குழம்பாகும்.