Thattuvadai : மொறு மொறுனு குழந்தைகளுக்கு தட்டுவடை செய்து கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க.. இதோ இந்த மாதிரி செய்யுங்க!-how to make tasty thattuvadai recipe - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Thattuvadai : மொறு மொறுனு குழந்தைகளுக்கு தட்டுவடை செய்து கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க.. இதோ இந்த மாதிரி செய்யுங்க!

Thattuvadai : மொறு மொறுனு குழந்தைகளுக்கு தட்டுவடை செய்து கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க.. இதோ இந்த மாதிரி செய்யுங்க!

Divya Sekar HT Tamil
Aug 28, 2024 11:15 AM IST

Thattuvadai : தட்டுவடை யாருக்குத்தான் பிடிக்காது. உருண்டையாக மொறு மொறுவென்று குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் தட்டு வடை எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

Thattuvadai : மொறு மொறுனு குழந்தைகளுக்கு தட்டுவடை செய்து கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க.. இதோ இந்த மாதிரி செய்யுங்க!
Thattuvadai : மொறு மொறுனு குழந்தைகளுக்கு தட்டுவடை செய்து கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க.. இதோ இந்த மாதிரி செய்யுங்க!

பருப்பு 2 டீஸ்பூன்

உரஸ் பருப்பு 2 டீஸ்பூன்

4 விசில் வரை பிரஷர் குக் செய்யவும்

அசாஃபோடிடா 1/4 தட்டு

உப்பு 1/2 டீஸ்பூன்

வெண்ணெய் 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் 1 டீஸ்பூன்

எள் விதைகள் 1/2 டீஸ்பூன்

அரிசி மாவு 250 கிராம்

கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை

தட்டுவடை யாருக்குத்தான் பிடிக்காது. உருண்டையாக மொறு மொறுவென்று குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் தட்டு வடை எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

ஒரு குக்கர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் பாசிப்பருப்பு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு ஸ்பூன் உளுந்தம் பருப்பு சேர்த்து நன்கு கழுவி கொள்ளுங்கள். பின்னர் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு வேகும் அளவிற்கு விசில் விட்டு இறக்கி விடுங்கள். 

நன்கு பிசையவும் ‌

இப்போது நன்கு வேக வைத்த அந்த பருப்புகளை நன்கு மசித்து விட்டு ஆரிய உடன் ஒரு பாத்திரத்தில் ஊற்றவும். இப்போது அதில் ஒரு ஸ்பூன் பெருங்காயம் தூள், அரை ஸ்பூன் உப்பு ஒரு ஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன், வெண்ணெய், பொடி சாக நறுக்கிய கருவேப்பிலை, கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து நன்கு பிசையவும்.

இதில் தண்ணீர் சேர்க்க தேவையில்லை. ஏனென்றால் பருப்பிலேயே தண்ணீர் இருப்பதால் நன்கு பிசைந்து கொள்ளவும். மிகவும் கெட்டியாக இருப்பது போல தோன்றினால் நீங்கள் தேவைக்கேற்ப தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளலாம்.

வாழை இலையும் பயன்படுத்தலாம்

மாவு மிருதுவாக வரும்வரை பிசைந்து பின்னர் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து பாலீத்தின் கவர்மீது வைத்து தட்டி விடுங்கள். இதில் எண்ணெய் தேய்த்து தட்டுவது அவசியம். நீங்கள் பாலீத்தின் கவர் அல்லது வாழை இலையும் பயன்படுத்தலாம். இப்போது நாம் தட்டி வைத்த அந்த தட்டுவடையில் ஃபோர்க் ஸ்பூன் எடுத்து ஓட்டை போடவும்.

பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நம் தட்டி வைத்த இந்த தட்டு வடையை போட்டு பொரித்து எடுக்கவும். இப்போது உங்களுக்கு மொறுமொறுப்பான தட்டு வடை ரெடி. முக்கியமாக இந்த தட்டு வடையை நீங்கள் பொறிக்கும் போது மிருதுவான தீயில் வைத்து பொரிப்பது அவசியம். இதனை வீட்டில் குழந்தைகளுக்கு சமைத்து கொடுங்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

சேலம் ஸ்பெஷல்

மாலை வேலையில் சேலம் மாநகரின் பல இடங்களில் தட்டுவடை  செட், முறுக்கு செட், தக்காளி செட் எனப் பல வகைகளில் ஆரோக்கியமான தின்பண்ட விற்பனை களைகட்டுகிறது. அடியில் ஒரு தட்டுவடை, அதற்கு மேல் துருவிய கேரட், பீட்ரூட், வெங்காயம், முட்டை கோஸ் போன்ற காய்களை வைத்து, பின்னர் தக்காளி சட்னி, பூண்டுச் சட்னி, வெங்காயச் சட்னி, புதினா, இஞ்சி, கறிவேப்பிலை துவையல் போன்றவற்றைச் சிறிதளவு இட்டு, மிளகுத் தூள், சீரகத் தூளைச் சற்றுத் தூவி, நல்லெண்ணெய் (அ) தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு சில துளிகள் விட்டு, மீண்டும் மேலே ஒரு தட்டுவடையை வைத்து மூடி ‘தட்டுவடை செட்’ என்று செய்து தருகிறார்கள். சில கடைகளில் பத்து முதல் பதினைந்து வகையான சட்னி/துவையல் வகைகள் சுவைக்கேற்ப கலக்கப்படுகின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.