SUNDAKKAI THUVAIYAL : சுவை நாக்கில் நிக்கும்.. சுண்டைக்காயில் துவையல் இந்த மாதிரி செய்து கொடுங்க.. அருமையா இருக்கும்!
Sundakkai Thuvaiyal : சுண்டைக்காயில் கால்சியம், புரதச்சத்து அதிகமாகவே உள்ளது. மலச்சிக்கலுக்கு இந்த சுண்டைக்காய் நல்ல மருந்து. உடல் சூட்டை தனித்து குடல் புண்ணை ஆற்றுமாம்.எனவே இவ்வளவு நன்மைகள் நிறைந்த இந்த சுண்டைக்காய் துவையலை வாரத்திற்கு ஒரு முறையாவது வீட்டில் உள்ளவர்களுக்கு சமைத்துக் கொடுங்கள்.
சுண்டக்காய் துவையல்
அறுசுவைகளில் ஒன்றான கசப்பு சுவையை அவ்வப்போது நம் உடலில் சேர்த்து கொள்வது நல்லது. அப்படி கசப்பு உள்ள காய்களில் ஒன்று சுண்டைக்காய். அதில் எப்படி ருசியான துவையல் செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சுண்டக்காய் - 2 (கை நிறைய)
சன்னா தால் - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 5/6
சின்ன வெங்காயம் - 10
பூண்டு பல் - 5
தேங்காய் - 2 டீஸ்பூன்
புளி - சிறிய துண்டு
கறிவேப்பிலை - 2 துளிர்
அசாஃபோடிடா - 1/4 டீஸ்பூன்
எள் எண்ணெய் - 2 டீஸ்பூன்
சுவைக்கு உப்பு
செய்முறை
சுண்டக்காய் துவையல் எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம். இந்த சின்னக்காயில் அவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது. இந்த காயில் துவையல் செய்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். சிலர் சுண்டைக்காய் என்றாலே பிடிக்காது என்று சொல்வார்கள். அவர்கள் கூட இந்த துவையல் செய்து கொடுத்தால் அவ்வளவு அருமையாக சாப்பிடுவார்கள். இந்த சுண்டைக்காய் துவையல் எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
சுண்டக்காயை காம்பினைக்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். அதனை அம்மி கல்லிலோ அல்லது வீட்டில் நாம் பயன்படுத்தும் சிறு உரலிலோ போட்டு நசுக்கி தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு கடாயின் சிறிது எண்ணெய் ஊற்றி நசுக்கி வைத்த சுண்டைக்காயை போடவும். நல்லெண்ணெய் ஊற்றி சமைத்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
அம்மியில் அரைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்
சுண்டைக்காய் நன்றாக சுருங்கியதும் அதனை எண்ணெயில் இருந்து எடுத்து விடுங்கள். பின்னர் அதே எண்ணெயில் கடலைப்பருப்பு சேர்த்து சிவக்க வறுத்து விட்டு அதில் காரத்திற்கு வர மிளகாய், சின்ன வெங்காயம் நான்கு பல் பூண்டு சேர்த்து வதக்கவும். நெல்லி கொட்டை அளவு புலி, 2 டீஸ்பூன் அளவு தேங்காய் துருவல், ரெண்டு கொத்து கருவேப்பிலை, சிறிது சோம்பு சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
இப்போது நாம் வதைக்கு வைத்த சுண்டைக்காயை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிவிட்டு ஆறியதும் மிக்ஸி ஜாரிலோ அல்லது அம்மிலோ சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அம்மியில் அரைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
குடல் புண்ணை ஆற்றுமாம்
இதில் கால்சியம், புரதச்சத்து அதிகமாகவே உள்ளது. மலச்சிக்கலுக்கு இந்த சுண்டைக்காய் நல்ல மருந்து. உடல் சூட்டை தனித்து குடல் புண்ணை ஆற்றுமாம்.எனவே இவ்வளவு நன்மைகள் நிறைந்த இந்த சுண்டைக்காய் துவையலை வாரத்திற்கு ஒரு முறையாவது வீட்டில் உள்ளவர்களுக்கு சமைத்துக் கொடுங்கள். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சுண்டைக்காயின் நன்மைகள்
சுண்டைக்காயில் அதிக அளவில் கால்சியம், புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. இது மனித உடலில் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி அஜீரணம், மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்க்க உதவி செய்யும். வயிற்றில் அதிகப்படியான அமிலச் சுரப்பு ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் வாய்ப்புண், கொழுப்பை குறைக்க பெரிதும் உதவும் .
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்