Road Side Kalan : ருசியான ரோட்டு கடை காளான் எப்படி செய்வது? ரொம்ப ஈஸி தான்.. டிரை பண்ணுங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Road Side Kalan : ருசியான ரோட்டு கடை காளான் எப்படி செய்வது? ரொம்ப ஈஸி தான்.. டிரை பண்ணுங்க!

Road Side Kalan : ருசியான ரோட்டு கடை காளான் எப்படி செய்வது? ரொம்ப ஈஸி தான்.. டிரை பண்ணுங்க!

Divya Sekar HT Tamil
Jan 30, 2024 10:16 AM IST

ரோட்டு கடை காளான் எப்படி செய்வது என்பது குறித்து இதில் காண்போம்.

ரோட்டு கடை காளான்
ரோட்டு கடை காளான்

காளான் - 1/2 கப்

வெங்காயம் - 2

தக்காளி - 2

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

பீஸ்ஸா சாஸ் - 1 டீஸ்பூன்

சோள மாவு குழம்பு

கார்ன் ஃப்ளேக்ஸ்

செய்முறை 

மக்கள் தற்போது மாலை நேர உணவாக ரோட்டு கடை காளான் தான் தேர்வு செய்கிறார்கள். அந்த அளவுக்கு மக்கள் அதனை விரும்பி சாப்பிடுகிறார்கள் அந்த ரோட்டு கடை காளான் எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

முட்டைக்கோசை எடுத்து பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள் அதே அளவு காளான் எடுத்து பொடி பொடியாக நறுக்கி கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, காஷ்மீரி மிளகாய்த்தூள், அரை கப் மைதா மாவு, அரை கப் கார்ன்ஃப்ளவர் மாவு அனைத்தையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

 அதாவது அதனை எண்ணெயில் போட்டு பொரிக்கும் அளவிற்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள் தண்ணீர் தேவைப்பட்டால் தெளித்து தெளித்து சரியான பதத்திற்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நீங்கள் மிக்ஸ் செய்து ரெடி செய்து வைத்திருந்த இந்த காளானை சிறிது சிறிது பீஸ் ஆக போட்டு பொறித்து எடுக்கவும்.

இப்போது மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு வதக்கிக் கொள்ளவும். பிறகு அதில் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும் அதனையும் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

இரண்டு தக்காளியை நன்கு மைய அரைத்து அதனை சேர்த்துக் கொள்ளவும். பின்னர் உப்பு சேர்த்து ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் கரம் மசாலா, ஒரு டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும். தேவை என்றால் நீங்கள் சாஸ் சேர்த்துக் கொள்ளலாம். நன்கு கொதிக்க விட்டு கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் நாம் பொரித்து வைத்திருந்த காளானை எடுத்து இதில் சேர்த்து நன்கு மசித்து வதக்கவும். இப்போது நமக்கு சுவையான ரோட்டு கடை காளான் ரெடி. இதனை வீட்டிலேயே செய்து சுவைத்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும்.

முட்டைக்கோஸ் நன்மைகள் 

கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும்

மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும்

சரும வறட்சியை நீக்கும்

வியர்வைப் பெருக்கியாக செயல்படும்

எலும்புகளுக்கு வலு கொடுக்கும்

பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.

நரம்புகளுக்கு வலு கொடுக்கும்.

காளான் பயன்கள்

மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காலான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. ஆண்களுக்கு உயிரணுக்களை அதிகப்படுத்தி மலட்டு தன்மையை நீக்குகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.