PULIYODHARAI PREMIX : குக் வித் கோமாளி சுஜிதா செய்த புளியோதரை.. கோயில் பிரசாதம் போல இருக்கும்.. ட்ரை பண்ணி பாருங்க!
PULIYODHARAI PREMIX : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த வாரம் சுஜிதா தயார் செய்த புளியோதரை எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
புளியோதரை பிரீமிக்ஸுக்கு தேவையான பொருட்கள்
சன்னா பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/4 ஸ்பூன்
மிளகு - 1/2 ஸ்பூன்
எள் - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 சரம்
காய்ந்த மிளகாய் - 5
புளி - சிறிய எலுமிச்சை அளவு
மஞ்சள் (மஞ்சள்) - 1/4 டீஸ்பூன்
அசோஃபெடிடா (பெருங்காயம்) - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன் (சாதத்துடன் கலக்கும்போது கூடுதல் உப்பு தேவைப்பட்டால் சரிசெய்யவும்)
செய்முறை
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த வாரம் சுஜிதா தயார் செய்த புளியோதரை எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
முதலில் கடாய் எடுத்துக் கொள்ளுங்கள் அதில் கடலைப்பருப்பு உளுந்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், மிளகு, கொத்தமல்லி, கருவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து நன்கு வறுத்து எடுக்கவும். பின்னர் அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் தேவையான அளவு புளி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் போட்டு வறுத்து எடுங்கள். பின்னர் நாம் வறுத்து வைத்த பொருட்களை மிக்ஸியில் போடுங்கள். அதில் இப்போது வருத்த புளியையும் போட்டுக் கொள்ளுங்கள். அதில் சிறிது உப்பு மஞ்சத்தூள் சேர்த்து பவுடர் போல அரைத்துக் கொள்ளவும்.
சுவையான புளியோதரை
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கடலைப்பருப்பு வரமிளகாய், கருவேப்பிலை, நிலக்கடலை சேர்த்து வதக்கி பின்பு நாம் அரைத்து வைத்த புளியோதரை பவுடரை சேர்த்து வதக்கவும். இப்போது வடித்து வைத்த சாதத்தை அதில் சேர்த்து நன்கு கிளறவும். சுவையான புளியோதரை ரெடி.
இதன் சுவை கோவிலில் கொடுக்கும் புளியோதரை சாதம் போலவே இருக்கும் இதை ஒரு முறை உங்கள் வீட்டில் சமைத்து கொடுங்கள் மீண்டும் மீண்டும் கேட்பார்கள் அவ்வளவு சுவையாக இருக்கும்.
லஞ்ச் பாக்ஸ் ஈசியாக கட்டிக்கொடுத்துவிடலாம்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் லஞ்ச் பாக்ஸ் ஈசியாக கட்டிக்கொடுத்துவிடலாம். இந்த ஒரு பொடிய செய்து வைத்து விட்டீர்கள் என்றால் நீங்கள் ரிலாக்ஸாக இருக்கலாம். காலையில் தாமதமாக எழுந்திருக்கும் நாட்களில் உடனடியாக சாதம் வைத்து புளியோதரை தயார் செய்துவிடலாம். உருளைக்கிழங்கை வறுத்துகொடுத்துவிட்டால் சுவையான லஞ்ச் பாக்ஸ் ரெடி.
புளியோதரை பொடி செய்ய தேவையான பொருட்கள்
வர மிளகாய் – 40 (காரத்துக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளலாம்)
மல்லி விதை – ஒன்றரை ஸ்பூன்
வெந்தயம் – ஒரு ஸ்பூன்
(மல்லி, வெந்தயத்தில் பாதியை மட்டும் வறுக்க வேண்டும், மிளாயில் 12 மட்டும் வறுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ள வேண்டும். அனைத்தையும் மொறு மொறுவென வறுக்க வேண்டும்)
நல்லெண்ணெய் - ஒரு கிண்ணம்
(ஒரு கடாயில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெயை சேர்த்து அது சூடானவுடன், எஞ்சிய மிளகாயை சேர்த்து வறுக்க வேண்டும்)
பின்னர் வெந்தயம், மிளகாய் மற்றும் மல்லி விதைகளை ஆறவைத்து, தனியாக காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக்கொள்ள வேண்டும்)
(பின்னர் எண்ணெயுடன் வறுத்த மிளகாயை ஆறவைத்து தனியாக அரைத்துக்கொள்ள வேண்டும்)
இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைக்கக் கூடாது. அதுதான் இந்த புளியோதரைக்கு வித்யாசமான சுவையை கொடுக்கும்.
ஏற்கனவே அதிகளவு மிளகாய் சேர்த்திருப்பதால் தாளிக்க தனியாக மிளகாய் கிள்ளி சேர்க்கக்கூடாது. இதுதான் புளியோதரை பேஸ்டுக்கு நல்ல காரத்தையும், நிறத்தையும் கொடுக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்