மார்னிங் பிரேக்பாஸ்ட்க்கு புது ரெசிபி வேண்டுமா? அதான் இருக்கே சுவையான பான்கேக்! இன்னைக்கே செஞ்சு அசத்துங்கள்!
நமது வீட்டில் இருக்கும் குழந்தைகள் வழக்கமான காலை உணவுகளால் சலிப்பு அடைந்து இருக்கலாம். இது போன்ற சமயத்தில் சுவையான மற்றும் புது விதமான பிரேக்பாஸ்ட் செய்து கொடுக்க வேண்டும். அப்படி ஒரு சிறந்த உணவு தான் பான்கேக், இதன் செய்முறையை அறிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

நாம் சாப்பிடும் வழக்கமான உணவுகள் தான் நமக்கு எப்போதும் சிறந்த உணவாக தோன்றும். ஆனால் சில சமயங்களில் புதிய விதமான உணவுகளை முயற்சி செய்து பார்க்கவும் மணம் தூண்டும். அப்போது நாம் வெளியில் வாங்கி சாப்பிடுகிறோம். எல்லா கடைகளிலும் சுத்தமான உணவை தயாரிக்கிறார்கள் என எந்த உத்தரவாதமும் கிடையாது. இதனை சரி செய்ய புதிய உணவுகளை நாமே வீட்டிலேயே செய்து பார்த்து சாப்பிடலாம். குறிப்பாக நமது வீட்டில் இருக்கும் குழந்தைகள் வழக்கமான காலை உணவுகளால் சலிப்பு அடைந்து இருக்கலாம். இது போன்ற சமயத்தில் சுவையான மற்றும் புது விதமான பிரேக்பாஸ்ட் செய்து கொடுக்க வேண்டும். அப்படி ஒரு சிறந்த உணவு தான் பான்கேக், இதன் செய்முறையை அறிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
4 முட்டை
கால் கப் காய்ச்சி ஆற வைத்த பால்
1 டீஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ்
கால் கப் மைதா மாவு
கால் டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
1 சிட்டிகை உப்பு
கால் கப் சர்க்கரை
தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
முதலில் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெள்ளை பாகத்தை தனி தனியாக பிரித்து எடுக்கவும். அடுத்து முட்டையின் வெள்ளை பாகத்தை பிரிட்ஜில் வைக்கவும். இப்பொழுது முட்டையின் மஞ்சள் கருவை பீட் செய்து அதனுடன் காய்ச்சி ஆறவைத்த பால், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்து விடவும். அடுத்து இதில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக கலந்து விடவும். பின்னர் பிரிட்ஜில் வைத்த முட்டையின் வெள்ளை கருவை எடுத்து பீட் செய்து, சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து பீட் செய்யவும். இப்பொழுது பீட் செய்த வெள்ளை பாகத்துடன், மஞ்சள் கரு கலவையுடன் சிறிது சிறிதாக சேர்த்து மெதுவாக கலந்து விடவும்.
ஒரு தோசை சட்டியை சூடாக்கி எண்ணெய் தடவவும். அடுத்து செய்து வைத்திருக்கும் பான்கேக் கலவையை சிறிது சிறிதாக ஊற்றி, பானின் ஓரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றவும். பின்பு ஒரு மூடி போட்டு மூட வேண்டும். இதனை மிதமான தீயில் வேகவிடவும். அடுத்து மூடியை திறந்து சிறிதளவு பான்கேக் கலவை, சிறிதளவு தண்ணீர் ஊற்றி பானை மூடி குறைந்த தீயில் மீண்டும் வேகவிடவும். பிறகு பான்கேக்கை மறுபுறம் திருப்பி சிறிதளவு தண்ணீர் ஊற்றி பானை மூடி குறைந்த தீயில் 2 நிமிடம் மீண்டும் வேகவிடவும். பானில் இருந்து கேக்கை எடுத்து தட்டில் வைத்து மேலே வெண்ணெய் மற்றும் தேன் ஊற்றி சூடாக பரிமாறவும்.பி அருமையான பான்கேக் ரெடி.

டாபிக்ஸ்