Paarai Meen Kulambu: ருசியான காரசாரமான பாறை மீன் குழம்பு செய்வது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Paarai Meen Kulambu: ருசியான காரசாரமான பாறை மீன் குழம்பு செய்வது எப்படி?

Paarai Meen Kulambu: ருசியான காரசாரமான பாறை மீன் குழம்பு செய்வது எப்படி?

I Jayachandran HT Tamil
Jan 26, 2023 07:00 AM IST

ருசியான காரசாரமான பாறை மீன் குழம்பு செய்வது எப்படி? என்பது பற்றி இங்கு காணலாம்.

பாறை மீன் குழம்பு
பாறை மீன் குழம்பு

மீன்களில் குறைந்த அளவிலேயே கொழுப்புகள் உள்ளன. மற்றும் இதில் உயர் தரமான புரதங்கள் உள்ளன.

இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி 2 போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

மீன்கள் இரும்பு, துத்தநாகம், அயோடின், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களின் சிறந்த மூலமாகும்.

மீன் குழம்பு என்றாலே தனி ருசி தான். அதிலும் குழம்புக்கு சுவை கூட்டக்கூடிய மீன் குழும்புகள் என்றால் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் தான்.

அந்த வகையில், குழம்பு ஏற்ற மீனாக உள்ள பாறை மீனில் எப்படி குழம்பு வைப்பது என்று இங்கு பார்க்கலாம்.

தேவையானவை :.

பாறை மீன் - 1/2 கிலோ

சின்ன வெங்காயம் - 100 கி.

தக்காளி - 3

பச்சை மிளகாய் - 6 (நடுவில் கீறிக்கொள்ளவும்)

வெந்தயம் - 1 டீஸ்பூன்

புளி - எலுமிச்சை அளவு

மிளகாய் தூள் - 2 1/2 தேக்கரண்டி

மல்லித்தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மாங்காய் - 1 முழுசு

தேங்காய் எண்ணெய் - 4 தேக்கரண்டி

பூண்டு - 10 (தட்டியது)

உப்பு - தேவையான அளவு

தேங்காய் - பெரிய மூடி 1

ஜீரகம் - 1 டீஸ்பூன்

செய்முறை:

மீனை நீரில் நன்கு கழுவி தயார் செய்ய‌ வேண்டும். தேங்காயை துருவி அதில் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து தனியே வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் புளியையும் ஊற வைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி விடவும். மாங்காயை துண்டாக நறுக்கவும்.

அடுப்பில் ஒரு மண்சட்டி அல்லது குழம்பு வைக்கும் பாத்திரம் எடுத்து அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடேற்றவும்.

காய்ந்ததும் ஜீரகம் மற்றும் வெந்தயத்தை போட்டு பொறிந்ததும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு தக்காளியை போட்டு வதக்கவும்.

பிறகு தேங்காய் அரைத்த கலவையை சேர்த்து 2 நிமிடம் வரை கிளரவும். அடுத்து புளி கரைத்த தண்ணீரை ஊற்றவும். அதனுடன் கழுவி வைத்த மீனையும் உப்பையும் போடவும்.

10 நிமிடம் கழித்து மிளகாய் தூள் வாசனை போனதும் மாங்காயை போட்டு 10 நிமிடம் கழித்து இறக்கவும். ம்ம்ம்..சுவையான மீன் குழம்பு ரெடி. சுவைத்து மகிழுங்கள்.

வார கடைசில் சுவையான மீன் குழம்பு தயார் செய்ய நீங்கள் விருப்பினால் கண்ணை மூடிக்கொண்டு பாறை மீனை தேர்வு செய்து ருசிக்கலாம்.

Whats_app_banner

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.