Mushroom Donne Biryani : காளான் தொன்னை பிரியாணி எப்படி செய்வது.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்.. ட்ரை பண்ணி பாருங்க!
Mushroom Donne Biryani : காளான் தொன்னை பிரியாணி எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம். இது பெங்களூர் மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் செய்யப்படும் பிரியாணி பாணியாகும்
காளான் தொன்னைபிரியாணி
இது பெங்களூர் மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் செய்யப்படும் பிரியாணி பாணியாகும். அதன் புகழ்பெற்ற இராணுவ ஹோட்டல்களில் இது மிகவும் பிரபலமானது. பிரியாணி பொதுவாக டோன் / தொன்னையில் பரிமாறப்படுகிறது, இது உலர்ந்த அரிக்கா பனை ஓலையால் செய்யப்பட்ட பெரிய டிஸ்போசபிள் கோப்பைகளைத் தவிர வேறில்லை. இது மிகவும் சுவையான பிரியாணி ஆகும், இது மூலிகை மற்றும் மசாலா பேஸ்ட்டிலிருந்து அதன் சிறப்பியல்பு பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தைப் பெறுகிறது.
தேவையான பொருட்கள்
காளான் 200 கிராம்
சீரக சம்பா அரிசி ஒரு கப்
எண்ணெய் 3 டீஸ்பூன்
நெய் 1 டீஸ்பூன்
இலவங்கப்பட்டை சிறிய துண்டு
ஏலக்காய் 2
கிராம்பு 2
நட்சத்திர சோம்பு 1
கல்பாசி
வெங்காயம் 1
தயிர் 2 டீஸ்பூன்
அரைக்க:
வெங்காயம் 1
மிளகு 1/2
ஜீரா 1/2 டீஸ்பூன்
பூண்டு 5
இஞ்சி சிறு துண்டு
பச்சை மிளகாய் 3
புதினா இலைகள் கையளவு
கொத்தமல்லி தழை கைப்பிடி
செய்முறை
தொன்னை பிரியாணி எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம். ஒரு கடாய் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிது எண்ணெய் ஊற்றி வெட்டி வைத்த வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். பின்னர் அதில் 5 பல் பூண்டு, 4 சிறிய சைஸ் பச்சை மிளகாய், சிறிய அளவு இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்ன அதில் அரை ஸ்பூன் சீரகத்தூள், 1/2 ஸ்பூன் மிளகுத்தூள், ஒரு கைப்பிடி அளவு புதினா, ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி சேர்த்து வதக்கவும் நிறம் மாறும் அளவிற்கு வதக்குங்கள். நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
நன்கு வதக்கி விடுங்கள்
இப்போது ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய், ஒரு ஸ்பூன் நெய், பட்டை, லவங்கம், ஏலக்காய், நட்சத்திர அண்ணாச்சி, கல்பாசி, ஒரு பிரியாணி இலை, வெங்காயம் ஒன்று சிறியதாக நறுக்கி வைத்தது சேர்த்து வதக்கி நாம் அரைத்து வைத்த மசாலாவை ஊற்றி, 200 கிராம் காளான் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் மல்லித்தூள், ஒரு ஸ்பூன் உப்பு 1/2 ஸ்பூன் தயிர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி விடுங்கள்.
சுவையான மஸ்ரூம் தொன்னை பிரியாணி ரெடி
பின்னர் ஊற வைத்த பச்ச அரிசியை சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் நன்கு மூடி வேக வைக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து பத்து நிமிடம் கழித்து நீங்கள் பரிமாறலாம் இப்போது உங்களுக்கு சுவையான மஸ்ரூம் தொன்னை பிரியாணி ரெடி.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்