தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Moongdal Thuvaiyal : குழம்பு வைக்க நேரமில்லையா.. அப்போ 5 நிமிடத்தில் சுவையான பாசிப்பருப்பு துவையல் செய்யலாம்!

Moongdal Thuvaiyal : குழம்பு வைக்க நேரமில்லையா.. அப்போ 5 நிமிடத்தில் சுவையான பாசிப்பருப்பு துவையல் செய்யலாம்!

Divya Sekar HT Tamil
Apr 24, 2024 12:19 PM IST

Moongdal Thuvaiyal : உடல் எடையை குறைக்க உதவும் பாசிப்பருப்பில் துவையல் எப்படி செய்வது என்பது குறித்து இதில் காண்போம். இது உடலின் இன்சுலின், குளுக்கோஸ் மற்றும் கொழுப்பு அளவை குறைக்கிறது. இது ரத்த சர்க்கரை அளவை குறைத்து, நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை குறைக்க உதவுகிறது.

பாசிப்பருப்பு துவையல்
பாசிப்பருப்பு துவையல்

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - 1/4 கப்

மிளகாய் வற்றல் - 2

பூண்டு பற்கள் - 3

தேங்காய்த்துருவல் - 3 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. வாணலியை சூடாக்கி 1/4 கப் பாசிப்பருப்பை சேர்த்து மிதமான சூட்டில் வாசம் வரும் வரை வறுக்கவும். பருப்பு பொன்னிறமாக மாறி சிவந்து வரும் வரை வறுக்கவும். பின் ஒரு தட்டில் மாற்றி ஆறவைத்துக் கொள்ளவும்.‌

2. பின் ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் தேவையான அளவு உப்பு, மிளகாய் வற்றல், வறுத்த பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் மற்றும் பூண்டு பற்கள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

அரைக்கும் போது தண்ணீர் சிறிதளவு சேர்த்தால் போதும். வறுத்த பருப்பை சிறிது தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளலாம். சூடான சாதத்தில் எண்ணெய் அல்லது நெய் விட்டு கலந்து பரிமாறவும்.

பாசிபருப்பின் நன்மைகள்

100 கிராம் பாசிப்பருப்பில், 6 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின் இ, சி, கே ஆகிய சத்துக்கள் உள்ளன. இது இந்திய சமையலில் அதிகளவில் இடம்பெறுகிறது. இது எளிதாக செரிக்கக் கூடியது.

மற்ற பருப்புக்களுடன் ஒப்பிடும்போது, இந்த பாசிப்பருப்பில் கார்போஹைட்ரேட்கள் குறைவாக உள்ளது. இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமான ஒன்று.

இதை நீங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால், எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

உடல் எடையை குறைக்க உதவுகிறது

பாசிப்பருப்பு, கோலேசிஸ்டோகினின் என்ற ஹார்மோன் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இதனால் நீங்கள் இதை சாப்பிட்ட பின்னர், உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக்கொடுக்கும்.

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

இது இரும்பு மற்றும் பொட்டாசிய சத்துக்கள் நிறைந்தது. இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. தசைப்பிடிப்புக்கு எதிரான பாதுகாப்பை ஏற்படுத்துகிறது.

ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது

பாசிப்பருப்பில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் காப்பர் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் ஃபோலேட், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் நிறைந்தது.

இது கார்போஹைட்ரேட்களை குளுக்கோஸாக மாற்றுகிறது. அது உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. இதில் உள்ள ஃபோலிக் ஆசிட் ஆரோக்கியமான மூளை இயக்கத்துக்கு உதவுகிறது. டிஎன்ஏவுக்கும் உதவுகிறது.

நார்ச்சத்துக்கள் நிறைந்தது

இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஒரு கப் பாசிப்பருப்பில், 40.5 முதல் 71 சதவீதம் அளவு தினசரி ஊட்டச்சத்து அளவை பூர்த்தி செய்கிறது.

இதில் உள்ள நார்ச்சத்துக்கள், ரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவை குறைக்கிறது. இதில் உள்ள அதிக புரதச்சத்துக்கள், சைவ உணவுகள் மட்டுமே உண்பவர்களுக்கு போதிய புரதத்தைக் கொடுக்கிறது.

நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது

இது உடலின் இன்சுலின், குளுக்கோஸ் மற்றும் கொழுப்பு அளவை குறைக்கிறது. இது ரத்த சர்க்கரை அளவை குறைத்து, நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை குறைக்க உதவுகிறது.

செரிமானத்தை அதிகரிக்கிறது

ஃபேட்டி ஆசிட் தொடரை உருவாக்குகிறது. இது வயிற்றுப்பகுதிகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதில் அழற்சிக்கு எதிரான உட்பொருட்கள் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்