தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mango Pickle : என்னா சுவை.. மாங்காய் சீசனில் மாங்காய் ஊறுகாய் இல்லை என்றால் எப்படி.. இதோ இப்படி செய்து பாருங்க!

Mango pickle : என்னா சுவை.. மாங்காய் சீசனில் மாங்காய் ஊறுகாய் இல்லை என்றால் எப்படி.. இதோ இப்படி செய்து பாருங்க!

Divya Sekar HT Tamil
May 29, 2024 12:33 PM IST

Tasty Mango pickle : மாங்காய் சீசனில் மாங்காய் ஊறுகாய் இல்லை என்றால் எப்படி பத்து நிமிடத்தில் சுவையான மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

என்னா சுவை.. மாங்காய் சீசனில் மாங்காய் ஊறுகாய் இல்லை என்றால் எப்படி.. இதோ இப்படி செய்து பாருங்க!
என்னா சுவை.. மாங்காய் சீசனில் மாங்காய் ஊறுகாய் இல்லை என்றால் எப்படி.. இதோ இப்படி செய்து பாருங்க!

ட்ரெண்டிங் செய்திகள்

மாங்காய் சீசனில் மாங்காய் ஊறுகாய் இல்லை என்றால் எப்படி பத்து நிமிடத்தில் சுவையான மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ஒரு ஸ்பூன் கடுகு

கால் ஸ்பூன் வெந்தயம்

இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்

ஒரு ஸ்பூன் கடுகு

4 காய்ந்த மிளகாய்

இரண்டு கொத்து கருவேப்பிலை

 துருவின மாங்காய் பெரியது 1 

2 ஸ்பூன் மிளகாய்த்தூள்

அரை ஸ்பூன் மஞ்சள் தூள்

 1/2 ஸ்பூன் உப்பு

அரை ஸ்பூன் வெல்லம்

செய்முறை

புளிப்பில்லாத மாங்காயை எடுத்துக் கொள்ளுங்கள். அதை தோல் சீவி கேரட் துருவல் போல மாங்காயை துருவிக் கொள்ளவும். புளிப்பு இல்லாத மாங்காயாய் இருந்தால் உப்பு காரம் நாம் குறைவாக சேர்த்தாலே போதும். எனவே புளிப்பு இல்லாத மாங்காயை எடுத்து ஊறுகாய் செய்வது சிறந்தது.

முதலில் ஒரு காடாயை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் கடுகு, கால் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள். அதனை ஒரு மிக்ஸியில் சேர்த்து தூளாக அரைத்துக் கொள்ளுங்கள். கடுகு பொரியும் வரை வறுத்து எடுத்து அரைக்க வேண்டும்.

இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய், ஒரு ஸ்பூன் கடுகு, 4 காய்ந்த மிளகாய், இரண்டு கொத்து கருவேப்பிலை, துருவின மாங்காய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

 பின்னர் அதில் 2 ஸ்பூன் மிளகாய்த்தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கிளரிக் கொள்ளவும் 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் சேர்க்க வேண்டாம். இடையிடையே கிளறி விடவும். என்னை பிரிந்து மாங்காய் நன்கு தொக்கு போல வந்துவிடும். 

இப்போது நீங்கள் பொடி பண்ணி வைத்த கடுகு, சோம்புத்தூளை இதில் சேர்த்து கிளறி விடவும். பின்னர் அரை ஸ்பூன் வெல்லம் சேர்த்து நன்கு கிளறி விடவும். என்னை நன்கு பிரிந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது சுவையான மாங்காய் ஊறுகாய் ரெடி. இதனை நீங்கள் ஒரு வாரம் வைத்து சாப்பிடலாம் எண்ணெய் அதிகமாக ஊற்றி சமைத்தால் ஒரு மாதம் கூட வைத்து சாப்பிடலாம்.

மாங்காய் நன்மைகள்

மாங்காயை யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா? ஆனால் அதில் உள்ள நன்மைகள் என்னவென்று தெரிந்துகொண்டால் அது உங்களுக்கு இன்னும் பிடித்த காய் ஆகிவிடும்.

உடல் எடையை குறைக்க மாங்காய் உதவும். அசிடிட்டி பிரச்னையை தீர்க்க உதவும். கர்ப்பிணிகளில் சிலருக்கு புளிப்பு சுவையை சாப்பிட தோன்றும். அப்போது மாங்காயை சாப்பிடலாம். அது அவர்களுக்கு கர்ப்ப காலத்தில் காலை நேரத்தில் ஏற்படும் சோர்வை தடுக்க உதவும்.

மாங்காயை சாப்பிடும்போது, அது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. இதனால் மாங்காயை மதிய உணவுக்குப்பின்னர் எடுத்துக்கொண்டால் அது உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது.

கல்லீரலுக்கு மாங்காய் நன்மை தரும். குடலில் உள்ள தொற்றுகளை குணப்படுத்தவும் மாங்காய் உதவுகிறது. குடலை சுத்தம் செய்கிறது. மாங்காய் வெயில் காலத்தில்தான் அதிகம் கிடைக்கும்.

மலச்சிக்கல் நீங்க மாங்காய் உதவுகிறது

மாங்காயை அப்போது எடுத்துக்கொள்வது வெயிலால் ஏற்படும் வியர்குரு வராமல் தடுப்பதுடன், வெயிலால் ஏற்படும் அபாயங்களில் இருந்தும் நம்மை காக்கிறது. புதிய ரத்த அணுக்கள் உற்பத்தி செய்வதற்கும் உதவுகிறது. மலச்சிக்கல் நீங்க மாங்காய் உதவுகிறது. உப்பு மற்றும் தேன் தொட்டு சாப்பிட்டால் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறலாம்.

மாங்காய் சாறு அருந்தினால் கோடை காலத்தில் வியர்வை மூலம் வெளியேறும் சோடியம் குளோரைட் மற்றும் இரும்புச்சத்து தடுக்கப்படுகிறது. தயிருடன் மாங்காயை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

பல் பராமரிக்க உதவுகிறது. மாங்காயை கடித்து சாப்பிடுவதால் பற்கள் பலமடைகின்றன. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு தடுக்கப்படுகிறது. வாய் துர்நாற்றம் மற்றும் பல் சொத்தையாவது தடுக்கப்படுகிறது. உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

ஆனால் இவ்வளவு நன்மைகள் நிறைந்த மாங்காயை நாம் அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அது உடலில் சூட்டை ஏற்படுத்தும். அதனால் அதிகம் எடுத்துக்கொண்டால், வயிற்று வலி, வயிற்றில் உபாதைகளை ஏற்படுத்தும். எனவே அளவாக எடுத்து மகிழ்வாக வாழ்வோம்.

WhatsApp channel

டாபிக்ஸ்