Malli Mushroom : காளானில் வித்தியாசமான ரெசிபி.. மஸ்ரூம் மல்லி எப்படி செய்வது? இதோ பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Malli Mushroom : காளானில் வித்தியாசமான ரெசிபி.. மஸ்ரூம் மல்லி எப்படி செய்வது? இதோ பாருங்க!

Malli Mushroom : காளானில் வித்தியாசமான ரெசிபி.. மஸ்ரூம் மல்லி எப்படி செய்வது? இதோ பாருங்க!

Divya Sekar HT Tamil
May 31, 2024 06:55 AM IST

Malli Mushroom : காளான் வைத்து வித்தியாசமான ரெசிபியை எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம். மஸ்ரூம் மல்லி எப்படி செய்வது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.இது மிகவும் சுவையாக இருக்கும்.

காளானின் வித்தியாசமான ரெசிபி.. மஸ்ரூம் மல்லி எப்படி செய்வது? இதோ பாருங்க!
காளானின் வித்தியாசமான ரெசிபி.. மஸ்ரூம் மல்லி எப்படி செய்வது? இதோ பாருங்க!

இஞ்சி இரண்டு இன்ச் 

பூண்டு பத்து பல்

200 கிராம் காளான்

ஒரு பெரிய வெங்காயம்

ஒரு தக்காளி

கால் ஸ்பூன் மஞ்சள் தூள்

ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்

அரை டீஸ்பூன் கொத்தமல்லி தூள்

கால் ஸ்பூன் சீரகத்தூள்

சிறிது உப்பு

ஒரு கட்டு கொத்தமல்லி தலை

செய்முறை

காளான் வைத்து வித்தியாசமான ரெசிபியை எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம். மஸ்ரூம் மல்லி எப்படி செய்வது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.இது மிகவும் சுவையாக இருக்கும்.

முதலில் ஒரு கடாய் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நெய் ஒரு டீஸ்பூன்,இஞ்சி இரண்டு இன்ச், பூண்டு பத்து நீளவாக்கில் கட் செய்து நெய்யில் போடவும். இந்த இஞ்சி பூண்டை நீளவாக்கில் மெலிதாக கட் செய்து கடாயில் இருக்கும் நெய்யில் போட்டு வதக்க வேண்டும். பின்னர் அதில் 200 கிராம் காளானை சேர்த்து நன்கு வதக்கி தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அதே கடாயில் அந்த நெய்யில் ஒரு பெரிய வெங்காயத்தை சிறியதாக வெட்டி அதில் சேர்த்துக் கொள்ளுங்கள், ஒரு தக்காளியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும்.

கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன் கொத்தமல்லி தூள், கால் ஸ்பூன் சீரகத்தூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

ஒரு கட்டு கொத்தமல்லி தலையை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும் அரைத்து அதனை வதக்கி வைத்த வெங்காயம் தக்காளியில் ஊற்றவும். கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கி ஒரு ஐந்து நிமிடம் மூடி வைத்து கொதிக்க விடுங்கள். 

நன்றாக எண்ணெய் பிரிந்து வந்ததும் அதில் நாம் வதக்கி வைத்த காளானை சேர்த்து கிளறி விடவும். ஒரு எட்டு நிமிடம் நன்கு மூடி வைத்து வதக்குங்கள் உங்களுக்கு இப்போது சுவையான மல்லி மஷ்ரூம் ரெடி. இதனை ஒரு முறை வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். அவ்வளவு சுவையாக இருக்கும். வாரம் ஒரு முறையாவது இதனை செய்து சாப்பிட தூண்டும்..

காளான் நன்மைகள்

வயிற்று பிரச்னை தீரும் காளானில் வயிற்று புண்ணை எதிர்க்கும் குணங்கள் உள்ளன. எலும்புகளை பலமாக்கும் காளானில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.

பசியை குறைக்கிறது காளானை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள பசியும் அடிக்கடி எடுக்காது. காளான் நம் சருமத்திற்கும் நன்மை தரும். காளானை ஃபிரஷ்ஷாக சமைக்க வேண்டும். ஃபிரிட்ஜில் வைத்து சமைப்பதை தவிர்க்க வேண்டும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.