தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ladies Finger Fry : பேச்சுலர்ஸ் உங்களுக்குதான்.. இனி ஈஸியா நீங்கள் வெண்டைக்காய் பொரியல் செய்யலாம்.. இதோ பாருங்க!

Ladies Finger Fry : பேச்சுலர்ஸ் உங்களுக்குதான்.. இனி ஈஸியா நீங்கள் வெண்டைக்காய் பொரியல் செய்யலாம்.. இதோ பாருங்க!

Divya Sekar HT Tamil
May 30, 2024 11:02 AM IST

Ladies finger fry : வழவழப்பு இல்லாமல் பேச்சுலர்ஸ் எப்படி ஈசியாக வெண்டைக்காய் பொரியல் செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம். இந்த முறையில் செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்.

பேச்சுலர்ஸ் உங்களுக்குதான்.. இனி ஈஸியா நீங்கள் வெண்டைக்காய் பொரியல் செய்யலாம்.. இதோ பாருங்க!
பேச்சுலர்ஸ் உங்களுக்குதான்.. இனி ஈஸியா நீங்கள் வெண்டைக்காய் பொரியல் செய்யலாம்.. இதோ பாருங்க!

ட்ரெண்டிங் செய்திகள்

3 வர மிளகாய்

ஒரு டீஸ்பூன் அளவு கடலைப்பருப்பு

ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலை

அரை கிலோ வெண்டைக்காய்

கடுகு அரை ஸ்பூன்

கருவேப்பிலை

வெங்காயம் 

அரை ஸ்பூன் மஞ்சள் தூள்

 உப்பு தேவையான அளவு

செய்முறை

வழவழப்பு இல்லாமல் பேச்சுலர்ஸ் எப்படி ஈசியாக வெண்டைக்காய் பொரியல் செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

முதலில் ஒரு கடாய் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி 3 வர மிளகாய் சேர்த்து அதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு கடலைப்பருப்பு, ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலை சேர்த்து வதக்குங்கள். இதனை நீங்கள் சிம்மில் வைத்து வறுக்க வேண்டும் நன்கு வருத்ததும் அதனை எடுத்து ஆறவிடுங்கள். ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். மிகவும் நைசாக அரைக்க வேண்டாம் கொரகொரப்பாக அரைத்தாலே போதும்.

அரை கிலோ வெண்டைக்காயை எடுத்து நன்கு கழுவி அதனை துடைத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து வெட்டி வைத்த வெண்டைக்காயை வழவழப்பு இல்லாமல் ஒரு ஐந்திலிருந்து ஏழு நிமிடம் கலர் மாறும்வரை வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள் ரொம்ப மிகவும் வதக்க வேண்டாம் கலர் லைட் ஆக மாறியதும் எடுத்து விடுங்கள்.

இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு அரை ஸ்பூன் சேர்த்து அதில் கருவேப்பிலை, ஒரு வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை வணக்கி அதில் நாம் கட் செய்து வதக்கி வைத்த வெண்டைக்காயை இப்பொழுது சேர்த்துக் கொள்ளலாம். 

இப்போது அதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு சிறிது நாம் அரைத்து வைத்த கல்லை கடலைப்பருப்பு சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். ஐந்து நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து இதனை கிளறி வதக்கினால் போதும் உங்களுக்கு அட்டகாசமான வெண்டைக்காய் பொரியல் ரெடி. இது பேச்சுலருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே இதனை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

வெண்டைக்காய் நன்மைகள்

வெண்டைக்காயில் உள்ள அதிக நார்ச்சத்து, குடலில் இருந்து சர்க்கரை உறிஞ்சப்படும் விகிதத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது. வெண்டை தவறாமல் சாப்பிடுவது சிறுநீரக நோயைத் தடுக்கவும், அதிக கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவும். வெண்டைக்காய் செரிமான பிரச்சினைகளுக்கும் நிவாரணம் தருகிறது.

முதிர்ச்சியடையாத வெண்டைக்காயில் காய்களில் உள்ள பாலிசாக்கரைடுகள் கணிசமான ஆண்டிபிசின் பண்புகளைக் கொண்டுள்ளன, அதாவது அவை பாக்டீரியா மற்றும் வயிற்று திசுக்களுக்கு இடையிலான பிசின் அகற்றுகிறது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

வெண்டை, ஒரு ஊட்டச்சத்து அடர்த்தியான உணவாகும், அதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது உணவு நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும், இது மலச்சிக்கலைத் தடுக்கவும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். வெண்டைக்காயில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அதிக அளவு தாதுக்களும், வைட்டமின்கள் சி, கே மற்றும் ஃபோலேட் போன்ற தாதுக்களும் உள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்