தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Curry Leaves Podi : ரத்த ஓட்டத்தை அதிகரிக்க.. நீரிழிவை குணப்படுத்த.. முடி நன்கு வளர இனி வீட்டில் இதை செய்யுங்கள்!

Curry Leaves Podi : ரத்த ஓட்டத்தை அதிகரிக்க.. நீரிழிவை குணப்படுத்த.. முடி நன்கு வளர இனி வீட்டில் இதை செய்யுங்கள்!

Divya Sekar HT Tamil
Apr 11, 2024 01:32 PM IST

Curry Leaves Podi : கறிவேப்பிலை பச்சையாகவும், காயவைத்தும் பயன்படுத்தப்படுகிறது. இதில் பல்வேறு வகை அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இதில் கறிவேப்பிலை பொடி எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

கறிவேப்பிலை பொடி
கறிவேப்பிலை பொடி

ட்ரெண்டிங் செய்திகள்

உடைத்த கருப்பு உளுந்தம்பருப்பு - 1/8 கப்

மிளகாய் வற்றல் - 8

எள்ளு - 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - 2 கப்

பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. கனமான இரும்பு வாணலியை சூடாக்கி 1 டேபிள் ஸ்பூன் எள்ளை சேர்த்து பொரியும் வரை வறுத்துக் கொள்ளவும். பின் ஒரு தட்டில் மாற்றி ஆறவைத்துக் கொள்ளவும்.

2. அதே வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் கடலைப்பருப்பு சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும். கடலைப்பருப்பு லேசாக நிறம் மாறும் போது கருப்பு உளுந்தை சேர்த்து சிவக்கும் வரை வறுக்கவும். இரண்டு பருப்புகளும் நன்கு வறுபட்டு சிவந்ததும் தட்டில் மாற்றிக் கொள்ளவும்.

3. பின் மிளகாய் வற்றல் சேர்த்து வறுத்து ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளவும்.

4. பின் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை சேர்த்து நன்கு (மிக்ஸரில் இருக்கும் கறிவேப்பிலை போல மொறு மொறுப்பாக மாறும் வரை வறுத்துக் கொள்ளவும்). பின் தட்டில் மாற்றி ஆறவைத்துக் கொள்ளவும்.

5. வறுத்த பொருட்களை ஆறவைத்துக் கொள்ளவும். பின் மிக்ஸி ஜாரில் வறுத்து ஆறவைத்த பருப்புகள் மற்றும் வறுத்த மிளகாய் வற்றல் தேவையான அளவு உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்து பின் வறுத்த கறிவேப்பிலை, வறுத்த எள்ளு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பொடி ஆறிய பின் காற்று புகாத பாட்டிலில் மாற்றிக் கொள்ளவும். ஆரோக்கியமான சுவையான கறிவேப்பிலை பொடி தயார்.

கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள் மற்றும் அதன் நன்மைகள்

கறிவேப்பிலை பச்சையாகவும், காயவைத்தும் பயன்படுத்தப்படுகிறது. இதில் பல்வேறு வகை அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.

5 கிராம் கறிவேப்பிலையில் 0.1 கலோரிகள் உள்ளது. இதில் பொட்டாசியம் 1.5 மில்லிகிராம், வைட்டமின் ஏ 0.50 சதவீதம், கால்சியம் 0.001, வைட்டமின் சி 0.10 சதவீதம், வைட்டமின் பி6 0.10 சதவீதம் உள்ளது.

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, பி2, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. இதன் சுவையும், மணமும் வித்யாசம் நிறைந்ததாக இருக்கும். இது வயிற்றுப்போக்கு, நீரிழிவு, காலை நேர சோம்பல், வாந்தி, மயக்கம் ஆகிய அனைத்தையும் குணப்படுத்த உதவுகிறது. உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது.

கொழுப்பை குறைக்க உதவுகிறது

செரிமானத்துக்கு உதவுகிறது

கல்லீரலுக்கு சிறந்தது

தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது

கண் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது

பாக்டீரியாவை போக்குகிறது

எடையை குறைக்க உதவுகிறது

பக்கவிளைவுகளை தடுக்கிறது

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது

நீரிழிவை குணப்படுத்துகிறது

காயங்களை குணப்படுத்த உதவுகிறது

பொதுவாக கறிவேப்பிலையை நாம் தினமும் உணவில் தாளிக்க பயன்படுத்துகிறோம். ஆனால் அதை பெரும்பாலும் சாப்பிடுவதில்லை, தூக்கி எறிந்துவிடுகிறோம். அதனால் அதன் நன்மைகள் நமக்கு முழுமையாக கிடைக்காமல் போகும். எனவே இதுபோல் அரைத்து தொக்காக பயன்படுத்தும்போது அதன் முழு நன்மைகளும் நமக்கு கிடைக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்