Guava Chutney : வித்தியாசமா சட்னி செய்ய ஆசையா.. அப்போ இத ட்ரை பண்ணுங்க..கொய்யா சட்னி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Guava Chutney : வித்தியாசமா சட்னி செய்ய ஆசையா.. அப்போ இத ட்ரை பண்ணுங்க..கொய்யா சட்னி!

Guava Chutney : வித்தியாசமா சட்னி செய்ய ஆசையா.. அப்போ இத ட்ரை பண்ணுங்க..கொய்யா சட்னி!

Divya Sekar HT Tamil
Feb 29, 2024 04:27 PM IST

Guava Chutney : தினமும் ஒரே மாதிரியான சட்னி சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? இனி கவலை வேண்டாம். கொய்யா சட்னி செய்து பாருங்கள்.

கொய்யா சட்னி
கொய்யா சட்னி

வெங்காயம் - 1

தக்காளி - 1

காய்ந்த மிளகாய் - 4

கள்ளபருப்பு - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு- 1 டீஸ்பூன்

உப்பு

இஞ்சி - 1 அங்குலம்

கறிவேப்பிலை

கொத்தமல்லி இலைகள்

செய்முறை

தினமும் ஒரே மாதிரியான சட்னி சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? இனி கவலை வேண்டாம். கொய்யா சட்னி செய்து பாருங்கள். வித்தியாசமாக இருக்கும். இட்லி தோசை எத்தனை சாப்பிடுவார்கள் என்றே சொல்ல முடியாது. அந்த அளவிற்கு சுவையாக இருக்கும். அந்த கொய்யா சட்னி எப்படி செய்யலாம் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

முதலில் கொய்யா ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கடாய் எடுத்து அதில் சிறிது நல்லெண்ணெய் பிறகு உளுந்தம் பருப்பு, கள்ள பருப்பு சேர்த்து பொன் நிறமாக வறுக்கவும். பின்னர் அதில் நீங்கள் நறுக்கி வைத்த கொய்யா துண்டுகளை சேர்க்கவும்.

பின்னர் இதனுடனே நறுக்கி வைத்த வெங்காயம், நறுக்கி வைத்த தக்காளி, சிறிய துண்டு இஞ்சி சேர்த்து வதக்கவும். நன்கு மிதமான சூட்டில் வதக்க வேண்டும். வெங்காயம் தக்காளி நன்கு வதங்கியவுடன் அதாவது நீங்கள் கொய்யா தோலை பார்த்தால் சுருங்கி இருக்கும் அந்த பதத்திற்கு வந்தவுடன் அதில் காரத்திற்கு வர மிளகாய், உப்பு, கொத்தமல்லி சேர்த்து மிக்ஸி ஜாரில் ஆறியவுடன் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுக்கு சுவையான கொய்யா சட்னி ரெடி.

இந்த கொய்யா சட்னியை உங்களுக்கு தேவையான பதத்திற்கு தண்ணீர் ஊற்றி ஆட்டிக் கொள்ளலாம். இனி வீட்டில் ஒரே மாதிரியான சட்னி செய்யாமல் இது மாதிரி வித்தியாசமான சட்னி செய்து கொடுத்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.

நன்மைகள்

மிகவும் சுவையான பழம் கொய்யா. பலர் கொய்யாவை விரும்பி சாப்பிடுவார்கள். கொய்யா வாய் வறண்டு இருக்கும்போது சுவையை மீட்டெடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இந்த பழம் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.

நல்ல செரிமானத்தை பராமரிக்க கொய்யா மிகவும் உதவுகிறது. இது தவிர, மலச்சிக்கலைப் போக்க கொய்யா மிகவும் உதவுகிறது. குடல் பிரச்சனைகளை குணப்படுத்துவதில் கொய்யாவிற்கு நிகர் கொய்யாதான் அதற்கு எந்த ஒப்பீடும் இல்லை.

நல்ல செரிமானத்தை பராமரிக்க கொய்யா மிகவும் உதவுகிறது. இது தவிர, மலச்சிக்கலைப் போக்க கொய்யா மிகவும் உதவுகிறது. குடல் பிரச்சனைகளை குணப்படுத்துவதில் கொய்யாவிற்கு நிகர் கொய்யாதான் அதற்கு எந்த ஒப்பீடும் இல்லை.

இந்த பழம் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க மந்திரம் போல் செயல்படுகிறது.

இந்த பழம் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்த கொய்யா மிகவும் உதவுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.