தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Crispy Cabbage Fry : ருசியான முட்டைகோஸ் ப்ரை செய்யலாமா? செம ஈஸி ரெசிபி தான்.. ட்ரை பண்ணி பாருங்க!

Crispy Cabbage Fry : ருசியான முட்டைகோஸ் ப்ரை செய்யலாமா? செம ஈஸி ரெசிபி தான்.. ட்ரை பண்ணி பாருங்க!

Divya Sekar HT Tamil
Apr 12, 2024 12:38 PM IST

Crispy Cabbage Fry : வைட்டமின் சி, வைட்டமின் கே, தியாமின், நியாசின், ஃபோலேட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களுடன் நார்ச்சத்தும் நிறைந்துள்ள முட்டைகோஸில் எப்படி சுவையான முட்டைகோஸ் ப்ரை செய்வது என்று பார்க்கலாம்.

முட்டைகோஸ் ப்ரை
முட்டைகோஸ் ப்ரை

ட்ரெண்டிங் செய்திகள்

முட்டைகோஸ்  சாப்பிடுவதால் பல சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக இதில் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே முடக்கு வாதம் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டைகோஸ் சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கண்டிப்பாக முட்டைகோஸை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வளவு நன்மைகள் நிறைந்த முட்டைகோஸில் எப்படி முட்டைகோஸ் ப்ரை செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

முட்டைகோஸ் ப்ரை

தேவையான பொருட்கள்

முட்டைக்கோஸ் - 250 கிராம்

உப்பு - 1 தேக்கரண்டி

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2தேக்கரண்டி

சீரக தூள் - 1 தேக்கரண்டி

காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி

அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி

சோள மாவு - 1 மேசைக்கரண்டி

கடலை மாவு - 1 1/2 கப்

முந்திரி பருப்பு - 100 கிராம்

பச்சை மிளகாய்

எண்ணெய்

செய்முறை

1. முட்டை கோஸை நீள வாக்கில் மெல்லிசாக நறுக்கி கொள்ளவும்.

2. இதனுடன் உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், சீரக தூள், காஷ்மீரி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

3. அரிசி மாவு, சோள மாவு, கடலை மாவு சேர்த்து கொஞ்சம் கொஞ்சம் ஆஹ் தண்ணி தெளிச்சு மசாலா அனைத்தும் காய் மேல் படும் அளவுக்கு கலந்து விடுங்க.

4. ஒரு கடாயில் பொரிக்க தேவையான எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் முந்திரி பருப்பை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

5. இப்போது கோஸ் கலவையில் இருந்து கொஞ்சம் எடுத்து சூடான எண்ணெயில் மெதுவா கொஞ்சம் கொஞ்சமாக உதிர்த்து விடுங்க. ஒரே இடத்தில் மொத்தமாக போடாமல் ஸ்பிரட் பண்ணி போடுங்க, எல்லாப்பக்கமும் பொன்னிறமாக வறுபட்டதும் எடுத்து வைத்துவிடலாம்.

6. அடுத்து அடுப்பை அணைத்து விட்டு, இருக்கிற சூட்டிலேயே நீளவாக்கில் கீறி வைத்து இருக்கிற பச்சை மிளகாயும் பொரிச்சி எடுத்துக்கலாம். வறுபட்டதும் பொரிச்சி வச்சிருக்கிற கோஸ் கூட சேத்துடலாம். இதே மாதிரி கொஞ்சம் கருவேப்பிலையும் பொரித்து எடுத்து சேர்த்துக்கலாம் .

7. பொரிச்சி வச்ச, முந்திரி பருப்பு, கோஸ், பச்சை மிளகாய், கறிவேப்பிலை எல்லாத்தையும் ஒரு பெரிய பாத்திரத்துல போட்டு நல்லா கலந்து விடுங்க.

8. இப்போது முட்டைக்கோஸ் ப்ரை பரிமாறி மகிழுங்கள்.

முட்டைக்கோஸ் நன்மைகள்

கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும்

மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும்

சரும வறட்சியை நீக்கும்

வியர்வைப் பெருக்கியாக செயல்படும்

எலும்புகளுக்கு வலு கொடுக்கும்

பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.

நரம்புகளுக்கு வலு கொடுக்கும்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்