தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tasty Recipe:டேஸ்டியான சிக்கன் முட்டை மிளகு சாப்ஸ் செய்வது எப்படி?

Tasty Recipe:டேஸ்டியான சிக்கன் முட்டை மிளகு சாப்ஸ் செய்வது எப்படி?

I Jayachandran HT Tamil
Mar 25, 2023 04:23 PM IST

டேஸ்டியான சிக்கன் முட்டை மிளகு சாப்ஸ் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

டேஸ்டியான சிக்கன் முட்டை மிளகு சாப்ஸ்
டேஸ்டியான சிக்கன் முட்டை மிளகு சாப்ஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான நல்ல கொலட்ஸ்ட்ரால் அதிகரிக்கும். உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.

முட்டையில் புரோட்டீன், மற்ற அத்தியாவசிய சத்துக்கள், குறைவான கலோரியும் உள்ளன.

எலும்புகளை ஆரோக்கியமாக்கும் சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ், கால்சியம் அதிகம் உள்ளது. சிக்கன் சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும்.

குறிப்பாக பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். மிளகு தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும். தொண்டை உறுத்தலை நீக்கும். சளியையும் குறைக்கும். நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு.

இப்போது சிக்கன், முட்டை, மிளகு கொண்டு சுவையான சிக்கன் முட்டை மிளகு சாப்ஸ் செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.

சிக்கன் முட்டை மிளகு சாப்ஸ் செய்யத் தேவையானவை :

சிக்கன் - அரை கிலோ

முட்டை - 4

சாம்பார் வெங்காயம் - 100 கிராம்

இஞ்சி - சிறு துண்டு

பூண்டு - 6 பல்

காய்ந்த மிளகாய் - 4

தனியா - 1 டேபிள் தேக்கரண்டி

மிளகு - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணைய் - 1 குழிக்கரண்டி

கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு

சிக்கன் முட்டை மிளகு சாப்ஸ் செய்முறை :

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். முட்டையை வேக வைத்து மஞ்சள் கருவை நீக்கி இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.

தனியா, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, வெங்காயம் ஆகியவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.

அரைத்த மசாலாவை சேர்த்து சிக்கனையும் சேர்த்து சிறிது நீர் ஊற்றி வேக விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

சிக்கனும், மசாலாவும் சேர்ந்து கெட்டியானதும் வெட்டி வைத்த முட்டையைச் சேர்த்துக் கிளறவும். குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.

டேஸ்டியான சிக்கன் முட்டை மிளகு சாப்ஸ் தயார். சுடச்சுட சாதம், சப்பாத்தி, தோசை, ஊத்தப்பத்துக்குப் பொருத்தமாக இருக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்