டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.. கேரளா ஸ்பெஷல் இலை அடை இப்படி செய்து கொடுங்க.. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.. கேரளா ஸ்பெஷல் இலை அடை இப்படி செய்து கொடுங்க.. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க!

டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.. கேரளா ஸ்பெஷல் இலை அடை இப்படி செய்து கொடுங்க.. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க!

Divya Sekar HT Tamil Published Mar 15, 2025 06:38 AM IST
Divya Sekar HT Tamil
Published Mar 15, 2025 06:38 AM IST

குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கேரளா ஸ்பெஷல் உணவான இலை அடை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காணலாம்.

டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.. கேரளா ஸ்பெஷல் இலை அடை இப்படி செய்து கொடுங்க.. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க!
டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.. கேரளா ஸ்பெஷல் இலை அடை இப்படி செய்து கொடுங்க.. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க!

கேரள ஸ்டைல் ராகி இலை அடை செய்ய தேவையான பொருட்கள்

1. அரிசி மாவு - 1 கப்

2. கேழ்வரகு மாவு - 1/4 கப்

3. உப்பு - 1 சிட்டிகை

4. நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

5. துருவிய தேங்காய் - 1 கிண்ணம்

6. வெல்லம் - 1/4 கப்

7. ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்

8. எண்ணெய்

செய்முறை

  • 1. பாத்திரத்தில் அரிசி மாவு, கேழ்வரகு மாவு, உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து கலந்துவிடவும்.
  • 2. பின்பு சிறிது சிறிதாக சூடான தண்ணீர் சேர்த்து பிசைந்து மாவு திரண்டு வந்த பின் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பிசைந்து10 நிமிடம் ஊறவிடவும்.
  • 3. மற்றொரு பாத்திரத்தில் துருவிய தேங்காய், வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து மிக்ஸ் செய்யவும். வாழையிலையை சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
  • 5. பின்பு அதில் எண்ணெய் தடவி தயார் செய்த மாவில் சிறிதளவு எடுத்து உருண்டையாக உருட்டி இலையில் வைத்து தட்டையாக தட்டி கொள்ளவும்.
  • 6. பிறகு தயார் செய்த கலவையை வைத்து இலையை மூடவும்.
  • 7. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு பின்பு தயார் செய்த அடையை வைத்து பாத்திரத்தை மூடி 15 நிமிடம் வேகவிடவும்.
  • 8. இப்போது சுவையான, ஆரோக்கியமான கேழ்வரகு இலை அடை தயார்.

மேலும் படிக்க : அனைவருக்கும் பிடித்தமான தக்காளி சூப் நான்கு வெரைட்டிகளில்!

இதனை வீட்டில் உள்ள அனைவருக்கும் செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த கேரளா ஸ்பெஷல் உணவான இலை அடை ரெசிபியை வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை செய்து கொடுங்கள்.

சர்க்கரை வள்ளி கிழங்கு ஷேக்

சர்க்கரை வள்ளி கிழங்கில் ஷேக் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அதை எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

ஒரு சர்க்கரை வள்ளி கிழங்கையும், மூன்று கேரட்டையும் தோல் நீக்கி கழுவி வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் வேகவைத்த கிழங்கும் கேரட்டும், ஐஸ் கட்டியான பாலும், ஐஸ்கிரீமும், ஒரு தேக்கரண்டி ஏலக்காய் பொடியும், தேவைக்கு ஏற்ப இனிப்பும் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

தேவைப்பட்டால் சிறிது பாலும் சேர்க்கலாம். இப்போது மிகவும் சுவையான குழந்தைகளுக்கெல்லாம் பிடித்தமான சர்க்கரை வள்ளி கிழங்கு ஷேக் ரெடி. அடுத்த முறை சர்க்கரை வள்ளி கிழங்கில் இந்த மாதிரி ஒரு ஷேக் செஞ்சு சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.

Divya Sekar

TwittereMail
திவ்யா சேகர், 2019 முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றிய அனுபவம் உண்டு. இவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் முடித்துள்ளார். இவர் தமிழ்நாடு, பொழுதுபோக்கு, லைஃப் ஸ்டைல்,ஜோதிடம் சார்ந்த செய்திகளில் பங்களித்து வருகிறார். இவருக்கு பொழுதுபோக்கு திரைப்படம் பார்ப்பது, பாடல்கள் கேட்பது, புது இடத்திற்கு சென்றால் அதனை எக்ஸ்ப்ளோர் செய்து வீடியோவாக பதிவிடுவது ஆகும்.
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.